Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ஓய்வுநாளை நினைப்பாயாக

    நான்காம் கற்பனையின் ஆரம்பத்திலேயே நினைப்பாயாக என்று கர்த்தர் சொல்லுகிறார். எண்ணிறந்த கவலை, மலைப்புகளுக்கிடையில் நியாயப்பிரமாணம் எதிர் பார்க்கும் யாவையும் கைக்கொள்ளாதபடி மனிதன் போக்குச் சொல்ல சோதிக்கப்படுவானென்றும் அதன் பரிசுத்த முக்கியத்துவத்தைப்பற்றி மறந்து விடுவானென்றும் அவர் அறிந்திருந்தார். ஆதலாம், அவர் ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக என்றார். யாத். 20:8. கர்த்தருடைய கற்பனைப்படி ஓய்வுநாளை ஆசரிக்கும்படியான நினைவு வார முழுவதும் நம் மனத்தில் இருக்கவேண்டும். ஓய்வுநாளை எழுத்துப்படியான கட்டளையாக கைகொள்ளக்கூடாது. ஜீவியத்தின் சகல கடமைகளையும் கட்டுப்படுத்துகிற ஆவிக்குரிய சம்CCh 87.2

    பந்தத்தை யுடையதென்று உணர்ந்து அதைக் கைக்கொள்ளவேண்டும். ஓய்வுநாள், கடவுளுக்கும் தங்களுக்குமிடையில் அடையாளமாக நின்று, அவர் தங்களைப் பரிசுத்தம் பண்ணுகிற கடவுள் என்று காட்டுகிறது என்று கருதுவோர் யாவரும், கடவுள் ஆதிக்க இலட்சியங்களைத் தங்கள் ஜீவியத்தில் உயர்த்திக் காட்டுவர். அவர்கள் தேவ ராஜ்யத்தின் கட்டளைகளை அனுதினமும் அப்பியாசிப்பர். ஓய்வு நாளின் பரிசுத்தம் தங்கள் மேல் அமரும்படி அனுதினமும் ஜெபிப்பார்கள். தினமும் கிறிஸ்துவுடன் சஞ்சரித்து, அவருடைய குணத்தின் பூரணத்தைத் தங்கள் ஜீவியத்தில் ஒப்பிட்டுக் காட்டுவார்கள். அவர்கள் நற் கிரியைகளின் மூலமாய் வெளிச்சம் பிறருக்கு தினமும் பிரகாசிக்கும்.CCh 88

    கடவுள் வேலையின் சித்திக்கு அடிப்படையாக முதல் வெற்றி குடும்ப ஜீவியத்தில் பெறவேண்டும். ஓய்வுநாளுக்கான ஆயத்தம் குடும்பத்தில் முதலாவது ஆரம்பிக்கவேண்டும். பரலோக வாசஸ்தலங்களுக்கு பிள்ளைகள் ஆயத்தப்படுவதற்கான பள்ளியாக தங்கள் வீடு இருக்கிறதென்று வாரமுழுவதும் பெற்றோர் நினைக்க வேண்டும். அவர்கள் சீரான வார்த்தைகளையே பேசவேண்டும். ஆவி கோபமற்றதாக இருக்க வேண்டும். பெற்றோரே நீங்கள் வாரமுழுவதும் தேவ சந்நிதியில் இருப்பது போன்று எண்ணி ஜீவித்து உங்களுக்கு அருளப்பட்டிருக்கும் பிள்ளைகளை அவருக்காக பயிற்றுவியுங்கள். ஓய்வுநாளில் எல்லாரும் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தில் தொழ ஆயத்தப்பட உங்கள் வீட்டில் உள்ள சிறு சபையை பயிற்றுவியுங்கள். காலை மாலை தோறும் அவரது இரத்தக் கிரயமான சம்பத்தாக பிள்ளைகள் அவருக்குப் படையுங்கள். கடவுளை நேசித்து அவரைச் சேவிப்பது அவர்களுடைய முதற் கடமையும் சிலாக்கியமும் என்று படிப்பியுங்கள்.CCh 88.1

    இங்ஙனம் ஓய்வுநாள் நினைவு கூறப்படும்பொழுது, அநித்தியமான காரியங்கள் ஆவிக்குரிய காரியங்களுக்கு இடையூறாக இருக்கலாகாது. ஆறு நாட்களுக்குரிய வேலைகளை ஓய்வு நாளில் நிறைவேற்றும்படி விட்டுவைக்கப்படாது. அநித்திய காரியங்களிலேயே நமது முழு சக்திகளையும் வார முழுவதும் செலவு செய்து, கர்த்தர் ஓய்ந்திருந்து பூரித்த ஓய்வுநாளில் நாம் அவரது ஆராதனையில் பிரவேசிக்க களைப்படைந்தவர்களாக இருக்கப்படாது.CCh 88.2

    ஓய்வுநாளுக் கான ஆயத்தம் வாரம் முழுவதும் செய்யப்படவேண்டியதாக இருந்த போதிலும், வெள்ளிக்கிழமை விசேஷித்த ஆயத்தம் செய்யும் நாளாயிருக்கவேண்டும். மோசேயின் மூலமாக கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி நாளைக்குக் கர்த்தருக்குரிய பரிசுத்த நாளாகிய ஓய்வு; நீங்கள் சுடவேண்டியதைச் சுட்டு, வேவிக்க வேண்டியதை வேவித்து, மீதியாயிருக்கிறதை யெல்லாம் நாளை மட்டும் உங்களுக்காக வைத்துவையுங்கள் என்றார். யாத். 16:23. ஜனங்கள் போய் அதை (மன்னாவை) பொறுக்கிக்கொண்டு வந்து, யந்திரங்களில் அரைத்தாவது, உரல்களில் இடித்தாவது, பானைகளில் சமைப்பார்கள். அதை அப்பங்களாகவும் சுடுவார்கள்; எண். 11:8. பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட ஆகாரத்தை ஆயத்தப்படுத்துவதிலும் அவர்கள் செய்ய வேண்டிய வேலை அவர்களுக்கு இருந்தது, இந்த வேலையை வெள்ளிக்கிழமையான ஆயத்த நாளிலே செய்ய வேண்டுமென்று கர்த்தர் கட்டளை யிட்டிருந்தார்.CCh 89.1

    வெள்ளிக்கிழமை அன்றே ஓய்வுநாளுக் கான ஆயத்த வேலை முடிவு பெறவேண்டும். உடை, உணவு யாவும் தயாராய் இருக்கிறதா என்றும் பாதரட்சைகள் மினுக்கப்பட்டும், வீட்டார் அனைவரும் ஸ்நானம் செய்து, ஆயத்தமாயிருக்கிறார்களா என்றும் கவனிக்கப்படவேண்டும். இவ்வித ஆயத்தம் செய்வது சாத்தியமே. இதை ஓர் கட்டளையாகக் கொண்டால் அதை அவ்வாறே நிறைவேற்றலாம். ஆடைகளைப் பழுது பார்ப்பதற்கும், ஆகாரம் தயாரிப்பதற்கும், உல்லாச பொழுது போக்குக்கும், லெளகீக அலுவல்களுக்கும் ஓய்வு நாளை பயன்படுத்தக் கூடாது. சூரிய அஸ்தமனமாவதற்கு முன்னதாக வேலை ஜோலிகளை நிறுத்தி லெளகீக பத்திரிகைகளை அப்புறப்படுத்த வேண்டும். பெற்றோரே, ஓய்வுநாளுக்காக ஆயத்தப்படும் வேலையையும், அதன் நோக்கத்தையும் பிள்ளைகளுக்கு எடுத்துக் கூறுங்கள்; கற்பனையின்படியே ஓய்வு நாளை ஆசரிக்க செய்யும் ஆயத்தத்தில் அவர்களும் பங்கெடுக்கட்டும்.CCh 89.2

    ஓய்வுநாளின் ஆரம்ப நேரத்தையும் முடிவு நேரத்தையும் நாம் மிக வைராக்கியமாக காத்துக்கொள்ளவேண்டும். ஒவ்வொரு வினாடியும் பரிசுத்த நேரம் என்பதை நினைத்துக் கொள்ளுங்கள். கூடுமான வரை முதலாளி தன் தொழிலாளிகளுக்கு வெள்ளி நடுப்பகல் முதல் ஓய்வுநாள் ஆரம்ப வேளை மட்டும் விடுமுறை கொடுக்கலாம். இது அவர்கள் கர்த்தருடைய நாளை அமைதியோடு வரவேற்க ஆயத்தப்பட உதவியாயிருக்கும். இப்படிச் செய்வதால் தொழில் நஷ்டம் ஏதும் நேரிடாது.CCh 90.1

    ஆயத்தநாளில் கவனிக்க வேண்டிய மற்றொரு அலுவலுமுண்டு. இந்நாளில் குடும்பத்திலும் சபையிலும் சகோதரர்களுக் கிடையிலுள்ள எல்லா மனக் கசப்புகளும், வேற்றுமைகளும் அகற்றப்படவேண்டும். எல்லா கசப்பும், குரோதமும், கோபமும் ஆத்துமாவிலிருந்து வெளி யேற்றப்படவேண்டும். பணிந்த ஆவியுடன், நீங்கள் சொஸ்த மடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள். யாக். 5:16. 6 T. pp. 353-356.CCh 90.2

    கடவுள் பார்வையில் ஓய்வுநாளை பரிசுத்த குலைச்சலாக்கும் காரியமெனக் கருதப்படும் எதையும் ஓய்வுநாளில் சொல்லவோ, செய்யவோ கூடாது. சரீர உழைப்பினின்று நீங்குவது மட்டுமல்ல, ஓய்வுநாளில் மனதும் பரிசுத்த காரியங்களில் ஈடுபடுவதற்கேதுவாக அடக்கியாளப்படவேண்டும் என்று கடவுள் கேட்கிறார். உலகக் காரியங்கள் பற்றி பேச வதினாலும், மட்டரக சம்பாஷணைகளில் ஈடுபடுவதினாலும், நான்காம் கற்பனை உள்ளபடியே மீறப்படுகிறது. நினைத்த எதையும் பேசுவது நம் சொந்த வார்த்தைகளைப் பேசுவதாகும். நேர்மையிலிருந்து, வழி விலகுவது நம்மை அடிமைத்தனத்திற்கும், கண்டனத்துக்கும் உட்படுத்துகிறது. 2T. p.703.CCh 90.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents