Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அத்தியாயம்-12

    உலகில் தேவ சபை

    தேவன் தாம் தெரிந்துகொண்ட ஜனமடங்கிய ஒரு சபையை உலகில் வைத்திருக்கிறார்; அவர்கள் அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்கள். இங்கு மங்கும் எழுந்துள்ள தான் தோன்றிகளையல்ல. ஆனால் ஒரு ஜனத்தைத் தேவன் நடத்துகிறார். சத்தியம் பரிசுத்தமாக்கும் ஒரு வல்லமை, ஆனால் பிளவுபட்டு போராடும் சபை வெற்றியடையும் சபையல்ல. கோதுமையோடு களைகளும் உண்டு. நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்குச் சித்தமா? என்பது வேலைக்காரருடைய கேள்வி வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்பு மட்டும் வளர விடுங்கள் என்பது எஜமானது உத்தரவு. மத். 13:28, 29. சுவிசேஷம் நல்ல மீன்களை மட்டுமல்ல, ஆகாதவைகளையும் இழுக்கிறது, ஆனால் தம்முடையவர்கள் யாரென அவருக்கு மட்டுமே தெரியும்.CCh 194.1

    தேவனோடு மனத்தாழ்மையாய் நடப்பதே நம் கடமை. நூதனமான புது தூதை நாம் தேட அவசியமில்லை. தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டு, ஒளியில் நடக்க முயலுவோரை பாபிலோன் என்று நாம் எண்ணக்கூடாது. 2T. T. 362.CCh 194.2

    சபையில் தீயன காணப்பட்டு அவை உலக முடிவு பரியத்தம் அங்கு இருக்க நேரிடினும், பாவத்தால் கறைப்பட்ட உலகத்திற்கு, இக்கடைசிக் கால சபை, ஒளியாக இருக்கவே நியமிக்கப்பட்டிருக்கிறது. பலவீனப்பட்டு, குறைவுப்பட்டு, கண்டிப்பு, எச்சரிப்பு, ஆலோசனை முதலியன தேவைப்பட்ட போதிலும், இவ்வுலகில் கிறிஸ்து தம் சிரேஷ்ட மதிப்பை அருளும் ஒரே பொருள் சபையே. தேவன் மனுஷ இருதயங்களில் தமது கிருபையினாலும், தெய்வீக இரக்கத்தினாலும் பரிசோதனைகள் நடத்தும் தொழிற்சாலை உலகமே. 2T. T 355.CCh 194.3

    தேவனுக்கு ஒரு விசேஷித்த ஜனம், உலகில் சபையாக இருக்கிறது. இது எதற்கும் இரண்டாவதானதல்லவெனினும், சத்தியத்தைக் கற்பிக்க சிசேஷ்டமான அறிவு பெற்று தேவ கற்பனை நியாயமென்று சாதிக்கத்தக்கது. பகலின் உஷ்ணத்தையும் பாரத்தையுஞ் சுமந்து உலகில் கிறிஸ்துவின் ராஜ்யத்தை முன்னேறச் செய்யும்படி பரலோக சாதனங்களோடு ஒத்துழைக்கும் தெய்வீக ஏற்பாட்டுக் கருவிகளான, தேவனால் நடத்தப்படும் மனிதர்கள் தேவனுக்கும் உண்டு. இப்படித் தெரிந்துகொள்ளப்பட்டவர்களோடு யாவரும் சேர்ந்து, கடைசியாக் தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ளா விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை யுடையோருடன் காணப்படுவார்களாக. 2 T. T. 361, 362.CCh 195.1