Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    மண வாழ்க்கை எளிமையும் இன்பமும் அமைந்த நிகழ்ச்சியாய் இருத்தல் வேண்டும்

    கிறிஸ்துவினிடத்திலிருந்து தோன்றிய தெய்வ அன்பு மானிட அன்பை ஒருகாலும் அழித்துப் போடாது; அதைத் தனக்கு உட்படுத்திக்கொள்ளும். அதனால் மானிட அன்பு மாசு நீங்கித் தூய்மை பெற்று உயர்ந்து மேன்மை அடையும். மானுட அன்பு தெய்வத் தன்மையுடன் இணைந்து, பரலோகத்திற்கு நேராக வளர்ந்தாலன்றி அரிய பலனை அளிக்கவியலாது. இயேசு இன்பத் திருமணங்களையும், இன்பம் மிகுந்த குடித்தனங்களையும் காண விரும்புகின்றார். AH. 99, 201.CCh 374.1

    இயேசுசும் அவருடைய சீஷரும் இந்தக் (கானவூர்) கலியாணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள் என்று வேத வசனம் விளம்புகின்றது. கிறிஸ்தவர்கள் கலியணத்துக்கு அழைக்கப்பட்டிருக்கும் பொழுது, மகிழ்ச்சி கொண்டாடுகின்ற அந்நிகழ்ச்சிக்கு அவர்கள் போகக்கூடாதென்று, கிறிஸ்து ஒருகாலும் கட்டளையிடவில்லை. கிறிஸ்து இந்தல் கலியாணத்திற்குப் போனதினால், நாம் தம் கட்டளைகளைக் கைக் கொண்டு நடந்து சந்தோஷப்படுகிறவர்களுடனே கூடச் சந்தோஷப்பட வேண்டுமென்றே போதிக்கின்றார். பரலோக சட்ட திட்டங்களுக்கு இசைவாக நடத்துகின்ற குற்றமற்ற கொண்டாட்டங்களின் ஊக்கத்தை அவர் எக்காலத்திலும் குலைத்துப் போடவில்லை. கிறிஸ்து தமது பிரசன்னத்தினால் பெருமைப்படுத்திய கூட்டத்திற்கு அவருடைய அடியார்கள் போகிறது நியாயமேயாகும். இந்த வைபவத்திற்குச் சென்ற பின்பு, கிறிஸ்து வேறு பல வைபவங்களுக்கும் சென்று, தமது பிரசன்னத்தினாலும் போதனையினாலும் அவற்றைப் பரிசுத்தப்படுத்தினார்.CCh 374.2

    தம்பதிகள் ஒருவருக்கொருவர் நிறைந்த பொருத்தமாய் அமைந்திருக்கும் பொழுது, நாம் பெரிய கோலாகல ஊர்வலமும் கொண்டாட்டமும் நடத்த அவசியமில்லை.CCh 375.1

    ஆரவாரமும் ஆனந்தமும் யாதேனும் ஒரு வகைப் பகட்டும் கூடிய விவாக முறைமையைக் காண்பது எனக்கு எப்பொழுதும் மிகவும் பொருத்தமற்றதாகத் தோன்றுகின்றது. அது மகா பயபக்தியுடனே நாம் நன்கு மதித்து நடத்த வேண்டியதும் கடவுள் ஏற்படுத்தியுள்ளதுமான நியமம். இங்கே பூலோகத்தின் குடும்ப உறவு அமைகின்ற பொழுது, அங்கே பரலோகத்திலுள்ள குடும்பம் எப்படி இருக்கும் என்று காண்பிக்கத் தகுதியுள்ளதாய் இருக்க வேண்டும். எப்பொழுதும் முதன் முதல் கடவுளுக்கே மகிமை செலுத்த வேண்டும். (AH 99, 201).CCh 375.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents