Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தேவனை சிந்தனைக்குரியவராக்கும் வகையில் உடுத்து

    அனைவரும் ஒழுங்கும், சுத்தமும், சீரும் உள்ள உடை அணியப் போதிக்கப்பட வேண்டும். கர்ததருடைய பரிசுத்த ஸ்தலத்திற்கு முற்றும் பொருந்தாத வெளி அலங்கரிப்பில் இறங்கிவிடக்கூடாது. பரிசுத்தமின்மையைத் தூண்டும் அலங்கார உடை தரிக்கலாகாது. அடுக்கடி ஆராதிப்போரின் கவனம் இந்த அல்லது அந்த ஆடம்பரமான உடையின் பேரில் செலுத்தப்படுகின்றது. இவ்வாறு இருதயத்தில் இடம் பெறாதிருக்க வேண்டிய எண்ணங்கள் தூண்டப்பட இடமளிக்கலாகாது. கடவுள் ஆராதனையின் பொருளாகவும் எண்ணமாகவும் இருக்க வேண்டும். பயபக்தியான பரிசுத்த ஆராதனையினின்று மனதை வேறு பக்கமாகத் திருப்பும் எதுவும் தேவனுக்கு அருவருப்பானது.CCh 221.2

    வேத விதிக்கிணங்க உடை அணிவதைப் பற்றிய காரியங்கள் யாவம் கண்டிப்பாக காக்கப்பட வேண்டும். நவ நாகரீக உடையலங்கார தேவதை வெளியுலகை ஆட்சி செய்து வருகிறாள். அவள் அடிக்கடி சபைக்குள் உபாயமாய் நுழைந்து கிரியை செய்கிறாள். சபை தேவனுடைய சஃவசனத்தைத் தனது அளவு கோலாக வைத்துக்கொள்ள வேண்டும். பெற்றோர் இவ்விஷயத்தைப் பகுத்தறிவுடன் சிந்தனை செய்ய வேண்டும். பிள்ளைகள் உலகப் பிரகாரமான வேஷத்தைப் பின்பற்றுவதற்குத் தூண்டப்படும்போது, பெற்றோர், ஆபிரகாமைப்போல, தங்கள் குடும்பத்தினர் திட்டமாகத் தங்களையே பின்பற்றக் கட்டளையிட வேண்டும். அவர்களை உலகத்தோடு பிணைக்காமல் கடவுளோடு இணைக்க வேண்டும். தங்கள் பகட்டான உடையினால் எவரும் தேவனுடைய கூடாரத்தை அவமதிக்கக்கூடாது. ஏனெனில், கடவுளும் தூதர்களும் அங்கிருக்கின்றார்கள். இஸ்ரவேலின் பரிசுத்தர் தமது அப்போஸ்தலன் மூலம்: “மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்நத வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக் கடவது. அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப் பெற்றது” என்கிறார். 1 பேது.3:3,4,5 T.495,500.CCh 222.1