Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பெற்றோரே, பிள்ளைகளின் இரட்சிப்புக்காக சேர்ந்து உழையுங்கள்

    திரை நீக்கப்பட்டு அன்றாடக் கிரியைகளை9க் கடவுள் பார்க்கிற மாதிரி பார்த்து, ஒருவர் வேலையை மற்றவரோட ஒத்துப் பார்த்து அந்த அதிசயக் கண்கள் காண்கிற மாதிரி பார்க்கக் கூடுமானால் பரலோக வெளிப்படுத்தலில் அவர்கள் பிரமிப்படைவார்கள். தந்தை தன் வேலையில் கர்வமில்லாத முறையில் உற்று நோக்குவான்; தாயும் புது தைரியம், ஊக்கம் பெற்று தன் வேலையை ஞானம், விடா முயற்சி, பொறுமையோடு செய்ய முற்படுவாள். இப்பொழுது அவளுக்கு அதன் மதிப்பு தெரியும். அழிந்து மறைந்து போகும் காரியத்திற்காக தந்தை பாடுபடும்போது, தாய் மனதையும் குணத்தையும் விருத்து செய்து, இக் காலத்துக்கும் நித்தியத்துக்கும் ஏதுவாக பாடுபடுகிறாள். A.H. 233.CCh 416.1

    பிள்ளைகளுக்குத் தந்தை ஆற்றும் கடமைகளைத் தாய்க்கு மாற்றி கொடுக்க முடியாது. அவள் தன் கடமைகளைச் சரி வரச் செய்தால் அவளுக்குப் போதுமான பாரமுண்டு. இருவரும் சேர்ந்துழைத்தால் மட்டும் கடவுள் அவர்கள் கரங்களில் ஒப்புவித்த வேலையைச் சரிவர செய்ய முடியும்.CCh 416.2

    இவ்வுலக வாழ்வுக்கும் நித்திய வாழ்வுக்கும் பிள்ளைகளைக் கற்பிக்கும் தன் வேலையிலிருந்து தந்தை தன்னை விலக்கிக் கொள்ளக்கூடாது. இப் பொறுப்பில் தகப்பன் கலந்து கொள்ள வேண்டும். தந்தை தாய் இருவருக்கும் கடமையுண்டு. இந் நற்குணங்கள் தங்கள் குழந்தைகளில் உருவேற்பட விரும்பினால் பெற்றோர் பரஸ்படம் அன்பு மரியாதை காட்ட வேண்டும். தகப்பன் தன் புத்திரர்களுடன் நெருங்கிப் பழகி தன் பெரும் அனுபவங்களின் பயன்களை எடுத்துக் கூற், அன்போடு அவர்களைத் தன் இருதயத்தோடு இணைக்க வேண்டும். எப்போதும் தான் அவர்களுடைய சந்தோஷம், நலம் கருதி உழைப்பதை அவர்கள் காணச் செய்ய வேண்டும்.CCh 417.1

    புத்திரர்களுள்ள குடும்பத் தலைவன் தான் எப்பதவி வகிப்பினும் தன் கவனத்திற்குள் வைக்கப்பட்ட ஆத்துமாக்களை பற்றி அசட்டையாக இருக்கக்கூடாது. அப்பிள்ளைகளை அவள் இவ்வுலகத்திற்கு கொண்டு வந்தான். எனவே அவர்களைக் கெட்ட தோழமை, பரிசுத்தமில்லா சகவாசங்களிலிருந்து காக்கும் சகல காரியங்களையும் செய்ய கடவுளுக்கு அவன் உத்திரவாதி. சதா சுறுசுறுப்புடனிருக்கும் தன் பிள்ளைகளை தாயின் பொறுப்பில் மட்டும் விட்டுவிடக்கூடாது, இது அவளால் சுமக்கக்கூடாத பாரமாகும். தாய்க்கும், பிள்ளைகளுக்கும் சிறந்த நன்மை கிடைக்கும் வகையில் காரியங்களை ஒழுங்குபடுத்த வேண்டும். தன்னடக்கத்தைக் கையாண்டு, பிள்ளைகளை பயிற்றுவிப்பது தாய்க்கு மிகச் சிரமமாயிருக்கலாம். இப்படி நேர்ந்தால், தந்தை பெரும் பொறுப்பை தன் மீது மேற்கொள்ள வேண்டும். தன் பிள்ளைகளை இரட்சிக்க மிக உறுதியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். A.H. 216-221. CCh 417.2