Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    குணவிருத்தியின் முக்கியத்துவம்

    கடவுள் பெற்றொருக்கு தெய்வ மாதிரியின்படியே தங்கள் பிள்ளைகளின் குணத்தை உருவாக்கும் வேலையை அளித்திருக்கின்றார். அவருடைய கிருபையினால் அவர்கள் இதை நிறைவேற்றக் கூடும்; என்றபோதிலும் பொறுமையுடனும் அதிக சிரமம் எடுத்துக் கொண்டும், உறுதியுடனும் தீர்மானத்துடனும் சித்தத்தை வழிகாட்டி நடத்தி, கோபதாபங்களைக் கட்டுப்படுத்தி வாழ்ந்து, இதைச் செய்ய வேண்டும். நிலத்தில் தானாகவே விளைச்சல் ஏற்படுவதற்கு விட்டுவிட்டால், முள்ளும் புதருமே அதில் எழும்பும். பிரயோஜனமான குணவழகை அறுவை செய்ய விரும்பினால், நிலத்தைப் பண்படுத்தி, விதை விதைத்து, களை கொந்தி, நீர் பாய்ச்சி, மண்ணை மிருதுவாக்கினால், அரும்பயிர் முளை தோன்ரியெழும்பி, ஓங்கி வளர்ந்து, தோட்டக்காரனின் பிரயாசத்திற்கும் உழைப்பிற்கும் தக்கதாக பெரும் அறுவடை விளையும்.CCh 525.1

    குணக் கட்டுமானம் மனிதரிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அலுவல்களுள் மிகவும் முக்கியமானது. இப்பொழுதைப் போல சுறுசுறுப்புடனே அதை நாம் கற்க வேண்டியதாக விருந்த காலம்வேறொன்றில்லை. முன் எந்தச் சந்ததிக்கும் முன்பாக இத்தனை பெரும் பிரச்சனைகள் இருந்ததில்லை. இளவயதினரான ஆண்களுக்கும் பெண்களுக்கும் இன்றைய வாலிபருக்கும் பெண்களுக்கும் இருக்கும் ஆபத்துக்கள் முன் ஒருகாலும் இருந்ததில்லை. CG 169.CCh 525.2

    குணக் கட்டுமானம் சித்த சக்தி, தன்னைக் கட்டுப்படுத்துதல் ஆகிய இரண்டினாலாகியது. மெய்யாகவே ஒரு மனிதனின் மகத்தானதும் பெரியதுமான தன்மை அவன் கீழடக்கிப் போடக்கூடிய உணர்ச்சிகளின் வலிமையின் அளவைச் சார்ந்தது. அன்றி, அவனைக் கீழடக்கிப் போடுகிற உணர்ச்சிகளின் வலிமையின் அளவைச் சார்ந்தது அல்ல. தன்னைத் தன் சத்துருக்கள் நிந்தனை செய்வதை அறிந்து, தன் கோப தாபங்களை அடக்கி தன் சத்துருக்களை மன்னிக்கின்றவனே மிகுந்த பலவான். அத்தகைய மனிதர் மெய்யான வீரர் ஆவார்.CCh 525.3

    சிலர் தாங்கள் எவ்வாறு விளங்கலாம் என்பதைக் குறித்து சுத்த தரித்திரமான கருத்துக்கள் உடையவர்களாக இருக்கின்றனர். இவர்கள் கடவுள் அவர்களுக்கு அளித்த சக்திகளை விருத்தி செய்தால் மேன்மையான குணத்தையுடையவர்களாகி, ஆத்துமாக்களைக் கிறிஸ்துவுக்கு ஆதாயஞ் செய்யத்தக்க செல்வாக்குடையவர்களாகக் கூடும், அறிவு வல்லமையுடையது. ஆயினும் இருதய நற்குணமில்லாது மூளைத் திறன் மட்டுமுடையவர்களாயிருப்பது தீமையின் சார்பில் இருக்கும் செல்வாகேயாகும்.CCh 526.1

    நமக்கு தெய்வம் மூளைத்திறனும் சன்மார்க்க வல்லமையும் அளித்திருக்கின்றார். ஒவ்வொரு மனிதனும் தன் குணத்தைக் கட்டும் சிற்பியாகவிருக்கின்றன. ஒவ்வொரு தினமும் கட்டடம் உயர்ந்துகொண்டே போகிறது. நாம் எவ்வாறு கட்டுகின்றோமென்றும், கற்பாறையின் மேல் கட்டுகிறோமாவென்றும் ஜாக்கிரையாகவிருக்குமாறு திருவசனம் நம்மை எச்சரிக்கின்றது. காலம் வரும்பொழுது, நம்முடைய வேலை நாம் செய்திருப்பது போலவே காணப்படும். இங்கே பயனுள்ள வாழ்வு வாழவும், இதற்கப்புறமாக இருக்கும் உன்னத வாழ்விற்கு தகுதியடையுமாறு அவரவருக்குத் தெய்வம் அளித்துள்ள சக்திகளை விருத்தி செய்யவும் அனைவருக்கும் இதுவே தருணம்.CCh 526.2

    முக்கியமில்லாத கிரியை ஆயினும், வாழ்வ்ன் கிரியைகள் ஒவ்வொன்றும் குணத்தை உருவாக்குவதில் வல்லமை அல்லது செல்வாக்கு உடையதாக இருக்கிறது. உலக ஆஸ்திகளைப் பார்க்கிலும் நல்ல குணம் விலையேறப்பெற்றது. அதை உருவாக்குவதற்கு செய்யும் அலுவல் மனிதர் ஈடுபடுகின்ற அலுவலகளை அனைத்திலும் மேன்மையானது.CCh 526.3

    சூழ்நிலையினால் உருவாக்கப்படும் குணம் மாறுதலடையக் கூடும். ஒன்றுக்கொண்று முரண் உடையதாகவும் இசைவில் லாததாகவும் இருக்கும். அதை உடையவர்களுக்கு மேலான நோக்கமோ, இலக்கோ கிடையாது. பிறர் குணத்தை மேன்மை அடையக் செய்யும் செல்வாக்கு இவர்களுக்கு இல்லை. இத்தகையோர் வாழ்வில் நோக்கமும் சக்தியுமற்றவர்கள். நமக்கு இங்கே அளிக்கப்பட்டிருக்கிற குறுகிய வாழ்நாள் ஞானத்துடனே பயன்படுத்தப்பட வேண்டும். தமது சபையானது உயிருள்ளதும், தங்களைத் தத்தம் செய்து ஊழியம் செய்கிறதுமான சபையாக இருக்க தெய்வம் விரும்புகிறார். இப்பொழுதோ ஒரு கூட்டமாக நமது மக்கள் இந்த இலட்சியத்திற்குத் தூரமாக இருக்கிறார்கள். உத்தம முன் மாதிரியைப் பின்பற்றி தெய்வத்திற்காகவும் நீதிக்காகவும் திடமான செல்வாக்கை உடையவர்களான, உயிருள்ள, கிரியை செய்கின்ற பலமும் தைரியமும் பொருந்திய ஆத்துமாக்களைக் கடவுள் அழைக்கிறார். மிகவும் முக்கியமான பக்தி வினயமுடைய சத்தியங்களைப் புனிதப் பொறுப்பாக நம்மிடத்திலே ஒப்புவித்திருக்கிறார். நம்முடைய வாழ்க்கையின் மீது, குணத்தின் மீதும் அவற்றிற்குச் செல்வாக்கு உண்டென்று நாம் காண்பிக்க வேண்டும். 4T 656, 657.CCh 526.4