Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    அனுமதியின்றி சாத்தான் நம் மனசுக்குள் நுழைய முடியாது

    நம்மால் கூடுமான அளவுக்கு மிஞ்சி சோதிக்கப்படாதிருக்கக் கடவுள் திட்டஞ் செய்திருக்கிறார்; ஆனால் ஒவ்வொரு சோதனையோடும் தப்பும் வழியும் ஏற்படுத்தியிருக்கிறார். நாம் கடவுளுக்கென்றே முற்றுமாய் ஜீவித்தால் நம் சுய நல மனத் தோற்றங்களைப் பேண மாட்டோம்.CCh 455.4

    மனசைக் கொள்ளும் ஏதாவது வழியிருந்தால், மிகுதியான பயன் தரத்தக்கதாக சாத்தான் களைகளை விதைத்து முளைக்கச் செய்வான். நாமே வாசலைத் திறந்து, பிரவேசிக்க அழைத் தாலன்றி சாத்தான் நம் சிந்தைகள், வார்த்தைகள் கிரியைகள் மேல் ஆதிக்கஞ் செய்ய முடியாது. பின்பு அவன் உட்புகுந்து இருதயத்தில் விதைக்கப்பட்ட நல்ல விதையை கைப்பற்றி சத்தியம் பயனற்றுப் போகச் செய்வான்.CCh 455.5

    சாத்தானுடைய ஆலோசனைகளுக்கு இணங்குவதினால் வரவிருக்கும் நலன்கள் எவையென ஆராயத் தாமதிபதினால் நமக்கு நன்மை கிடையாது. பாவத்தில் நிலைத்திருக்கும் ஒவ்வொரு ஆத்துமாவுக்கும் பாவம் கனவீனத்தையும், நாசத்தையும் கொடுக்கிறது. அது குருடும் ஏமாற்றமுமுடைய தன்மையுடையது. CCh 456.1

    முகஸ்துதியானவைகளைக் கொண்டு நம்மை அது வசீகரிக்கிறது. நாம் சாத்தானுடைய எல்லக்குட்பட்டால் அவனுடைய வல்லமையிலிருந்து பாதுகாப்பு கிடைக்குமென்ற நிச்சயம் நமக்கில்லை. நாம் சம்பந்தப்பட்ட அளவில் சாத்தானுக்கு இடமில்லாமல் எல்லாச் சங்கதிகளையும் மூட வேண்டும்.CCh 456.2

    தன் ஆத்துமாவில் சாத்தான் நுழையக்கூடிய எல்லா சந்துகளையும் கவனித்து, ஒவ்வொரு கிறிஸ்தவனும் இடையறாமல் காவல் செய்ய வேண்டும். தெய்வீக ஆதரவுக்காக ஜெபித்து அதே சமயத்தில் பாவத்துக்கு வழி நடத்தும் ஒவ்வொரு சுபாவத்தையும் முழு மூச்சுடன் எதிர்க்கவும் வேண்டும். தைரியம், விசுவாசம், விடா முயற்சியான உழைப்பு ஆகியவற்றால் வெற்றியடையக்கூடும். வெற்றியடைய கிறிஸ்து தன்னிலும், தான் கிறிஸ்துவிலும் நிலைத்திருக்க வேண்டுமென்பதை அவன் நினைக்க வேண்டும்.CCh 456.3

    நாம் செய்யக்கூடிய ஒவ்வொன்றிலும் நாமும் நமது பிள்ளைகளும் உலகம் அப்பியாசிக்கும் அக்கிரமத்தில் சிக்கிக் கொள்ளாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். இந்தப் படுபாவங்கள் நம் மனசில் நுழையாதபடிக்கு நம் கண்களையும், தமது காதுகளையும் வெகு கவனத்தோடு காத்துக்கொள்ள வேண்டும். ஒரு செங்குத்தான மலை சிகரத்தில் எவ்வளவு ஓரமாய் நடக்க முடியுமென துணியாதே. ஆபத்து தோன் றும் போதே அதிலிருந்து விலகு. ஆத்தும காரியங்களோடு அலட்சியமாக விளையாட முடியாது, உன் குணமே உன் மூலதனம். பொன் களஞ்சியம் போல் நீ அதைப் பேணு. சன்மார்க்கப் பரிசுத்தம், சுயமரியாதை, எதிர்க்கும் பலத்த வல்லமை யாவும் உறுதியாகவும் தொடர்ச்சியாகவும் பேணப்பட வேண்டும். தன்னடக்கத்திலிருந்து அணுவும் விலகலாகாது; சரசமான ஒரு செய்கை, விவேகமற்றா ஒரு காரியம் சோதனைக்கு கதவைத் திறந்து வைத்து ஆத்துமாவை அபாயத்துக்குள்ளாக்கி தடுக்கும் சக்தியைப் பலவீனப்படுத்தலாம். A. H. 401-404.CCh 456.4

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents