Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    குடிபெயர்ந்து செல்வதினால் சாட்சி பகர்தல்

    தேவனுடைய மக்கள் பெருங் கூட்டமாக ஒரே இடத்தில் வாழ்வது தெய்வத் திட்டமல்ல. கிறிஸ்துவின் சீஷர்கள் அவருக்குப் பிரதிநிதிகளாக நகரங்களிலும், கிராமங்களிலும் சிதறி சாட்சிகளாக விளங்க வேண்டும். அவர்கள் தேவனுக்கு ஊழியராகவிருந்து தங்கள் விசுவாசத்தால்ம் கிரியைகளாலும். கிறிஸ்துவின் மா சமீப வருகைக்கு சாட்சிகளாய்த் திகழ வேண்டும். நமது சபையார்கள் செய்யக்கூடிய மாபெரும் வேலையுண்டு; ஆனால் அவர்கள் அதை இன்னமும் செய்ய ஆரம்பிக்கவில்லை. உலக ஆதாயத்தைக் கருதி மட்டும் எவரும் வேறொரு இடத்திற்குக் குடிபெயர்ந்து போகக் கூடாது. எங்கே மிழைப்புக்கான வழி திறக்கிறதோ அங்கே சத்தியத்தில் பலமாக வேரூன்றி நிற்கும் ஒன்றிரண்டு குடும்பங்கள் சென்று மிஷனெரிகளாக வேலை செய்யலாம். அவர்கள் ஆத்தும்மாக்கள் பேரில் வாஞ்சை வைத்து, மனப்பாரத்துடன் உழைத்து, அவர்களை எவ்வாறு சத்தியத்தில் கொண்டு வரக்கூடுமென வழிவகைகள் தேடவேண்டும். நமது வெளியீடுகளை கொடுத்து, வீடுகளில் கூட்டங்களை நடத்தி, தம் அயலகத்தாரோடு பழகி, அவர்களை கூட்டங்களுக்கு அழைக்க வேண்டும். இவ்வாறு நற்கிரியைகள் மூலமாக வெளிச்சம் பிரகாசிக்கச் செய்யக்கூடும்.CCh 115.2

    ஊழியர்கள் தேவனோடு தனித்து நின்று ஆத்துமாக்களின் இரட்சிப்புக்காக அழுது, ஜெபித்து, உழைப்பார்களாக, அழிவில்லாத கிரீடம் பெறும்படி நீங்கள் பந்தய ஓட்டம் ஓடுவதை நினைத்துக்கொள்ளுங்கள். அனேகர், மனிதர் புகழ்ச்சியைச் தேவ தயவைக் காட்டிலும் அதிகமாக விரும்பினாலும், நீங்களோ தாழ்மையுடன் உழைப்பீர்களாக. மற்றவர்களுடைய இருதயத்தைத் தொடும்படி கிருபாசனத்திற்கு முன்பாக அவர்களுக்காக ஜெபித்து விசுவாசத்தைப் பயிற்சிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். இதனால் மிஷனெரி வேலை சித்திகரமாகும். போதகருக்கோ, புத்தக ஊழியருக்கோ செவிசாய்க்காத சிலர் இவர்களுக்குச் செவிசாய்ப்பார்கள். இப்படிப் புது இடங்களில் உழைப்பவர்கள் மக்களை அணுகும் சிறந்த வழிமுறைகளைக் கற்றுக்கொண்டு, வேறு ஊழியர்கள் அவ்விடங்களுக்கு வருவதற்கு வழி ஆயத்தப்படுத்துவார்கள். 8T. 244, 245.CCh 116.1

    உங்கள் அயலகத்தினரைச் சந்தித்து, அவர்கள் ஆத்தும இரட்சிப்பைக் குறித்து உங்களுக்கிருக்கும் வாஞ்சையைக் காட்டுங்கள். ஆவிக்குறிய சகல தத்துவங்களையும் தட்டி எழுப்புங்கள். எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமென யாவருக்கும் கூறுங்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவர் களுடைய இருதயக் கதவுகளைத் திறந்து நீங்கள் சொல்லுவதை அவர்கள் இருதயங்களில் ஆழமாய்ப் பதியச் செய்வார். அன்றாட வேலையில் ஈடுபட்டிருக்கும் பொழுதும் தேவ மக்கள் பிறரைக் கிறிஸ்துவண்டை வழி நடத்தலாம். இதைச் செய்யும்போது இரட்சகர் தங்களண்டையிருக்கிறாரென்ற உன்னத நிச்சயம் அவர்களுக்கு உண்டாகும். அவர்கள் தங்கள் சொந்த அற்ப முயற்சியை சார்ந்திருப்பதாகக் கவலைப்பட அவசியமில்லை. இருளில் கிடந்து தத்தளிக்கும் மக்களை ஆற்றி ஊக்கமளிக்கும் வார்த்தைகளை கிறிஸ்து அவர்களுக்கு அருளுவார். மீட்பரின் வாக்குகள் நிறைவேறுவதை உணர்வதால் அவர்கள் விசுவாசம் பலப்படும். கிறிஸ்துவுக்காக அவர்கள் செய்யும் வேலை பிறருக்கு மட்டுமல்ல, தங்களுக்கும் ஆசீர்வாதமாகவிருக்கும். 9T. 38, 39.CCh 116.2

    வேதாகமத்தை, அது இருப்பதுபோலவே, ஜனங்களுக்கு வாசித்து காட்டுவதால் பெரியதோர் வேலை செய்யப்படக்கூடும். தேவவசனத்தை வீடுவீடாக சுமந்து சென்று, அது கூறும் தெளிவான உரைகளை மக்கள் மனதில் பதியச்செய்து, வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள் என்ற இரட்சகரின் கட்டளையைத் திரும்ப திரும்பச் சொல்லுங்கள். (யோவா. 5:39). தெய்வீக விளக்கத்துக்காக மன்றாடி, வேத வாக்கியத்தை அதில் கண்டுள்ளபட்யே ஏற்றுக்கொண்டு, சத்திய ஒளி வீசும் போது அதன் மதிப்பேறப்பெற்ற ஒளியைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டு அதனால் வரவிருக்கும் விளைவைக் குறித்து பயமின்றி நிலைத்திருக்கப் போதியுங்கள். 5T. 388.CCh 117.1

    நமது சபை அங்கத்தினர் அதிகமாக வீடுவீடாகச் சென்று வேத வாசகங்கள் கொடுத்து, அனேக பிரசுரங்களை வழங்க வேண்டும். சத்தியத்தைக் கூறி யறிவிப்பதை ஒரு சிலாக்கியமாகக் கருதி, பொருளுதவி செய்து பாரபட்சமின்றி உழைக்கும்பொழுது, கிறிஸ்துவ குணலஷணம் நிரந்தரமாகவும், பூரணமாகவும் உருவாக்கப்படுகிறது. நம்முடைய ஆத்துமாவை கிறிஸ்துவில் நிலைபெறச்செய்து பகற் காலம் இருக்கும் போதே உழைத்து பொருளுதவி செய்து நம் கடமைகளை நிறைவேற்றி சகல தண்ணீர்களண்டையிலும் விதைக்க வேண்டும். நம் கைகள் செய்யும்படி வாய்ப்பதெதுவோ அதை உண்மையோடு செய்ய வேண்டும். எத்தியாகத்தையும் நாம் செய்யத் தயாராயிருக்க வேண்டும். நாம் தண்ணீர்களண்டையின் விதை விதைக்கும்போது பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான், சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான் என்பதின் கருத்தை அறிந்து கொள்வோம். 2 கொரி. 9:6. 9T. 126.CCh 117.2