Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அத்தியாயம்-38

    பயன் தரும் பொழுது போக்கு

    பயன் தரும் பொழுது போக்குக்கும், வேடிக்கை பொழுது போக்குக்கும் அனந்த வித்தியாசம் உண்டு. ஆரோக்கியப் பொழுது போக்கில், உடல் புத்துயில் பெறும், சாதாரணமான நம் வேலைகளிலும், கவலைகளிலுமிருந்து அது நம்மை அப்புறப்படுத்தி நம் உடலையும் மனதையும் புதுப்பித்து, வாழ்க்கையின் ஊக்கமான அலுவலுக்குப் போகும்படி நமக்குப் புதிய சக்திகளைப் பெற உதவுகிறது. வேடிக்கை பொழுது போக்கோ இன்ப உணர்ச்சிக்காக உபயோகிக்கப்பட்டு மிதமிஞ்சி போகிறது; உபயோகமான அலுவலுக்கு அவசியமான சக்திகளை அது உறிஞ்சிவிடுவதால், வாழ்க்கையின் மெய் சித்திக்குத் தடையாக இருக்கிறது. Ed. 207.CCh 441.1

    தாங்கள் விரும்புமளவில் மகிழ்ச்சி பெறும் பல வித ஏதுக்கள் கிறிஸ்தவர்களுக்கு உண்டு. நீதியும் நியாயமுமான இன்பங்கள் எவை யென அவர்கள் தவறாமல் குறிப்பாகச் சொல்லக்கூடும். தங்கள் மனசை இளங்கரிக்கச் செய்வது, ஆத்துமாவை ஈனப்படுத்துவதுமான எந்தப் பொழுது போக்கிலும் ஈடுபடார்: பிரயோஜனமில்லாததும், அனுபவித்த பின் தன் சுய மரியாதையைக் கெடுக்கும் எவ்விதக் கேளிக்கைகளிலும் ஈடுபடார். இயேசுவை தங்களோடு கொண்டு சென்று, ஜெப சிந்தையுடன் இருக்கக் கூடுமானால் அவர்கள் பத்திரமாக இருக்கிறார்கள்.CCh 441.2

    விசுவாசத்தோடு தேவாசீர்வாதந் தேடி நீங்கள் அனுபவிக்கத்தக்க எந்தப் பொழுது போக்கும் ஆபத்தாகாது. ஆனால் தனி ஜெபம், ஜெபபீடப் பக்தி, அல்லது ஜெபக் கூட்டத்தில் பங்கெடுப்பதைத் தடுக்கும் எந்தப் பொழுது போக்கும் பாதுகாப்பல்ல, ஆபத்துகரமானது.CCh 441.3

    பூமியில் நாம் கடவுளைத் தினமும் மகிமைப்படுத்துவதும் நம் சொந்த நாட்டங்களையும் நம்மையும் திருப்தி படுத்தாமல் வாழ்வதே நம் சிலாக்கியமென விசுவாசிக்கும் கூட்டத்திலிருக்கிறோம். நாம் மனுக்குலத்திற்கு ஆதரவாகவும் சமுதாயங்களுக்கு ஆசீர்வாதமாகவிருக்கும்படி இங்கே இருக்கிறோம். இழிவான காரியங்களில் தங்கள் மனதைச் செலுத்தி வீணும் விருதாவுமாக மூடப்போக்கில் செல்லும் மற்றவர்களைப் போல் நாமும் கீழ்த்தரமான சிந்தை செயல்களில் இறங்கினால், நம் சந்ததிகளுக்கும் நம் குலத்துக்கும் எப்படி ஆசீர்வாதமாக இருக்க முடியும்? நம்மைச் சூழ்ந்த சமுதாயத்திற்கு நாம் எப்படி ஆசீர்வாதமாக இருக்க முடியும்? நமது சாதாரணக் கடமைகளை மிக உண்மையும் உத்தமுமாய் செய்வதற்கும் நம்மைத் தகுதியற்றவர்களாக்கும் எந்தப் பொழுது போக்கான கேளிக்கைகளிலும் மாசற்ற விதமாய்க் கலந்துகொள்ள முடியாது. CCh 442.1

    இயல்பாகவே தகுதியான பல காரியங்களுண்டு. ஆனால் ஜாக்கிரதையற்ற அனேகருக்குச் சாத்தான் அவைகளைக் கண்ணியாக்கி விடுகிறான்.CCh 442.2

    பிற தொழில்களில் காணப்பட வேண்டியது போன்ரு நேரப்போக்கான கேளிக்கைகளிலும் மிதம் கையாளப்பட வேண்டும். நேரப்போக்கான கேளிக்கைகளின் தாரதம்மியங்கள் மிக கவனமாகவும் நுட்பமாகவும் அலசி ஆராயப்பட வேண்டும். என்னுடைய சரீர, மானத, ஆவிக்குரிய தன்மைகளை இந் நேரப்போக்கான கேளிக்கை எப்படிப் பாத்க்கும் என்று ஒவ்வொரு வாலிபனும் தன்னையே கேட்பானாக. இதனால் நான் கடவுளை மறக்கும்படி என் மனசு மயங்க முடியுமா? அவர் மகிமைக்கு இது தடையாகுமா? A. H. 512-514.CCh 442.3