Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    வேதம் முழுவதிலும் கிறிஸ்து

    சிலுவையில் அறையுண்ட இரட்சகராகிய கிறிஸ்து நித்திய ஜீவனைக் கொடுக்க வல்லவர் என ஜனங்களுக்குக் காண்பிக்க வேண்டும். புதிய ஏற்பாடு சுவிசேஷத்தின் வல்லமையை வெளிப்படுத்துவது போன்று, பழைய ஏற்பாடு சுவிசேஷத்தை முன் குறிப்புகளாலும், நிழலாலும் காட்டுகிறது என அவர்களுக்குக் காட்ட வேண்டும். பழைய ஏற்பாட்டின் காலத்திலும் புதிய ஏற்பாட்டின் காலத்திலும் மார்க்கம் ஒன்றே. பழைய ஏற்பாட்டை வெளிப்படுத்துவதே புதிய ஏற்பாடு.CCh 297.3

    ஆபேல் கிறிஸ்துவை விசுவாசித்தான். பேதுருவும், பவுலும் அவருடைய வல்லமையால் மீட்கப்பட்டது போல மெய்யாகவே ஆபேலும் மீட்கப்பட்டான். அன்பான யோவானைப் போன்று ஏதேனுக்கும் கிறிஸ்துவுக்கு மெய்யான பிரதிநிதியாயிருந்தான். ஏனோக்கு தெவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில் காணப்படாமற் போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார். கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் தூது ஏனோக்கிடம் ஒப்புவிக்கப்பட்டது. ஆதாமும் ஏழாந்தலைமுறையான் ஏனோக்கும் இவர்களைக் குறித்து; இதோ எல்லாருக்கும் நியாயத்தீர்ப்பு கொடுக்கிறதற்கு...ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான். என வாசிக்கிறோம். (யூதா. 14 வசனம்) ஏனோக்கு பிரசங்கித்த தூதும், அவர் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதும் அவர் காலத்தில் ஜீவித்தவர்களுக்கு மறுக்க முடியாத அத்தாட்சிகளாயிருந்தன். அவருக்குப் பின்னாக ஜீவித்த மெத்துசலாவும், நோவாவும் நீதிமான்கள் மறு ரூபமாக்கப்படுவது சாத்தியம் என வல்லமையாய்க் காட்டினர்.CCh 298.1

    ஏனேக்குடனே நடந்த தெய்வம் கர்த்தரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவே. இன்றுபோல அன்றும் அவர் உலகத்தின் ஒளியாக இருந்தார். ஜீவியத்தின் வழியைப் பற்றி போதிக்கிறவர்கள் அக்காலத்திலிருந்தவர்களுக்குள்ளும் இருந்தார்கள். ஏனெனில் நோவாவும், ஏனோக்கும் கிறிஸ்தவர்கள். லேவியர் ஆகமத்தில் சுவிசேஷம் கட்டளை வடிவில் கொடுக்கப்பட்டது. இப்பொழுது போன்று அப்பொழுதும் அருத்தாபத்தியான கீழ்ப்படித அவசியமாயிருந்தது. இந்த வார்த்தையின் முக்கியத்துவத்தை நாம் அறிவது எவ்வளவு அவசியம்!CCh 298.2

    சபையில் வறட்சி காணப்படுவதற்குக் காரணம் என்ன? என்று கேட்கப்படுகிறது. அதற்கு உத்தரவு பின்வருமாறு: நாம் தேவ வசனத்திலிருந்து நமது மனது அகல இடங் கொடுக்கிறோம். தேவனுடைய வார்த்தை ஆத்துமாவுக்கு ஆகாரமாக உட்கொள்ளப்பட்டு, அது மரியாதையாகவும், மதிப்பாகவும், எண்ணப்படுமானால் ஆலோசனைகள் திரும்பத் திரும்ப பல முறை கொடுக்கப்படவேண்டிய அவசியமில்லாதிருந்திருக்கும். சாதாரண வேத வாக்கிய அறிவுரைகள் ஏற்று, கைக்கொள்ளப்பட்டிருக்கும். 6T. 392,393.CCh 298.3