Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    பெற்றேராகுதல்

    தாயாகப் போகும் ஒரு பெண் தன் சூழ்நிலை என்னவாயிருந்தாலும் இவ்விஷயத்தில் எடுத்துக் கொள்ளும் முயற்சிக்குத் தக்கபடி தன் சந்ததியின் பண்பு, சன்மார்க்கம், சரீர வளர்ச்சி ஆகியவைகளின் மூலம் தனக்குப் பத்து மடங்கு நலம் கிட்டு மென்பதை உணர்ந்தவளாக மன ரம்மியமாகவும், மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கப் பழக வேண்டும், இது மட்டுமா, அதோடு மன மகிழ்ச்சியோடு யோசித்து தன் குடும்பத்திலும், தான் சகவாசஞ் செய்யப்போகும் யாவரோடும் நல் மனசுடன் உற்சாகமாக இருக்கப்போவதாக தன் மனதைத் திடப்படுத்திக்கொள்ள வேண்டும். அவள் சரீர திடம் இதனால் பெரிதும் முன்னேறும். ஜீவிய ஊற்றுகளுக்கு ஊக்கம் அளிக்கப்படும்; சோர்வு, விசனத்தால் உண்டாகக் கூடிய இரத்த ஓட்ட மந்தம் நீங்கும். ஆவியின் உற்சாகத்தால் மன, சன்மார்க்க ஆரோக்கியம் பெருகும். சித்த பலத்தால் மனக் கிளர்ச்சிகள் தடுக்கப்பட்டு நரம்புகள் சபலமின்றி அமைதி அடையும், பெற்றோரால் சுதந்தரமாகப் பெற வேண்டிய ஜீவ சக்திகளைப் பெறாத பிள்ளைகள் மேல் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். அவர்களுடைய அடிப்படை தத்துவங்களைக் கவனித்து சிரமம் எடுத்தால் அவர்கள் நிலை உயர்த்தப்படலாம்.CCh 402.2

    தாயாக எதிர்நோக்கும் ஒரு பெண் தேவ அன்பை தன்னில் பேண வேண்டும். மன அமைதி வேண்டும்; இயேசுவின் அன்பின் இளைப்பாறி கிறிஸ்துவின் வாக்கை அப்பியாசிக்க வேண்டும். தாய் கடவுளுடன் உடன் ஊழியக்காரியென்பதை அவள் சிந்திக்க வேண்டும்.CCh 403.1

    புருஷனும் மனைவியும் ஒத்துழைக்க வேண்டும். பலி பீடத்தில் எல்லாத் தாய்மார்களும் தங்களாஇப் படைப்பார்களாகில் உலகமே எப்படியிருக்கும்! குழந்தைகள் பிறக்கும் முன்னும், பின்னும் அவர்களையும் படைப்பார்களாயின் எப்படியிருக்கும்!CCh 403.2

    பெற்றோரின் செல்வாக்கு மிக அற்பமென பல பெற்றோரால் கருதப்படுகிறது; ஆனால் பரலோகம் அப்படிக் கருதவில்லை. தேவதூதனால் இரு முறை மிக பக்தி வினயமாக அனுப்பப்பட்ட தூது நாம் மிகக் கருத்துடன் கவனிக்கும்படி ஏவுகிறது.CCh 403.3

    எபிரேய தாயாகிய (மனோவாவின் மனைவிக்கு) சொல்லப்பட்ட தூது சகல யுகங்களிலிமுள்ள எல்லாத் தாய்மார்களுக்கும் சொல்லப்படுகிறது. நான் ஸ்திரீயோடே சொன்ன யாவற்றிற்கும், அவள் எச்சரிக்கையாயிருந்து . . . நான் அவளுக்குச் சொன்னதை யெல்லாம் கைக்கொள்ளக்கடவள் என்றார் அத்தூதன். தாயினுடைய பழக்க வழக்கங்களினால் குழந்தையின் நலம் பாதிக்கப்படும். அவளுடைய விருப்பங்களும், மனவெழுச்சிகளும் உயர் இலட்சியங்களால் ஆளப்பட வேண்டும். தேவன் அவளுக்கு அருளிய குழந்தைக்கு அவர் திட்டத்தை நிறைவேற்ற சிலவைகளை வெறுக்கவும், சிலவற்றிற்கு எதிரிடையாக உழைக்கவும் வேண்டும்.CCh 403.4

    இளைஞர்கள் இடறி விழச் செய்யும் பல கண்ணிகள் நிறைந்த உலகம் இது. ஏராளமானவர்கள் சுயநலமும் சிற்றின்பமும் பெருக்கும் இன்பங்களால் இழுக்கப்படுகின்றனர். அவர்கள் மறைந்திருக்கும் ஆபத்துக்களையும், தங்களுக்கு இன்பமாகத் தோன்றி இன்பமாக முடியும் வழிகளையும் கண்டுகொள்ளக் கூடாதிருக்கின்றன. தங்கள் தேட்டங்களையும், மனவெழுச்சிகளையும் பெருக்குவதால் தங்கள் சக்திகளை இழந்து, இலட்சக் கணக்கானவர்கள் இம்மை மறுமை இரண்டிலும் தங்களை நாசப்படுத்துகிறார்கள். பிள்ளைகள் சோதனைகளுக்கு எதிர்த்துப் போராட வேண்டியிருப்பதைப் பெற்றோர் உணர வேண்டும். தீமைக்கு விரோதமான போரில் குழந்தை சித்திகரமாகப் போராடும்படி பிறக்குமுன்னமே ஆயத்தம் செய்யப்பட வேண்டும்.CCh 404.1

    குழந்தை பிறக்கு முன் சுய தேட்டங்களில் நடந்து வெடுவெடுப்பாகவும், கொடூரமாகவும் நடந்திருந்தால் அதே தன்மைகள் குழந்தையில் பிரதிபலிக்கும். இப்படியாக அனேகக் குழந்தைகள் தீமைக்கு எதிர்த்துப் போராடக் கூடாத தன்மைகளைத் தம் பிறப்புரிமையாக பெற்றிருக்கின்றனர்.CCh 404.2

    ஆனால் தாய் நல்ல இலட்சியங்களைப் பேணி, இச்சையடக்கத்தோடும் சுய வெறுப்போடும் நடந்து, பட்சம், அமைதி, பரோபகாரச் சிந்தையுடன் நடந்தால் இந்த நற் பண்புகளைத் தன் குழந்தைகளுக்குப் பிறப்புரிமையாகக் கொடுக்கிறான்.CCh 404.3

    குழந்தைகள் தம் தாயின் பண்புகளையும் நடத்தைகளையும் பிரதிபலிக்கும் பளிங்குக் கண்ணாடிகள் போல் ஆவர். இச்சிறிய மாணவர்கள் முன் அவள் எவ்வளவு ஜாக்கிரதையாக தன் வார்த்தைகளையும் நடத்தையும் பேணிக் கொள்ள வேண்டும்! அவர்களில் காண விரும்பும் சுபாவங்களை அவள் தன்னில் காணப்படச் செய்ய வேண்டும்.CCh 405.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents