Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    கிறிஸ்து ஒருவரே மனிதனுக்கு நீதிபதி

    மானிடர் அடைய வேண்டிய துன்பங்களைச் சகிக்கும்படியும், சோதனையை எதிர்க்கும்படியும் கிறிஸ்து தம்மைத் தாழ்த்தி மானிட குடும்பத்தின் தலையாக நின்றார். சோதனையில் விழுந்தோரை எவ்விதம் விடுவிப்பது என அறியும்படிக்கு விழுந்துபோன சத்துருவாகிய சாத்தானை மனுக்குலம் எவ்விதம் எதிர்க்கக்கூடும் என்பதை அவர் அறிய வேண்டியதாயிருக்ந்தது.CCh 235.2

    கிறிஸ்து நமது நியாயாதிபதி. பிதாநியாயாதிபதியல்ல. தூதர்களும் நியாயாதிபதிகள் அல்ல. மானிட அவதாரம் எடுத்து, இவ்வுலகில் பூரண ஜீவியம் செய்தவரே நம்மை நியாயந்தீர்ப்பார். அவர்மட்டுமே நியாயாதிபதியாக இருக்கக்கூடும். சகோதரரே, இதை ஞாபகத்தில் வைப்பீர்களா? ஊழிகள்களே, இதை நினைவில் வைக்கமாட்டீர்களா? நமது நியாயாதிபதியாக இருக்கும்படிக்கே கிறிஸ்து மானிட ரூபம் எடுத்தார். உங்களில் ஒருவராவது பிறருக்கு நியாயாதிபதியாக இருக்கும். படி நியமிக்கப்படவில்லை. உங்களைக் கட்டுப்டுத்தி வாழ்வதற்கு இதுவே வழி. கிறிஸ்துவின் நாமத்தினால் நான் உங்களை வேண்டுவது என்ன வெனில், நியாயாசனத்தில் நீங்களே உங்களை அமர்ததாதபடி அவர் உங்களுக்குக் கொடுத்துள்ள எச்சரிப்புகளுக்குச் செவி சாயுங்கள். “நியாயாசனத்தை விட்டு இறங்குங்கள், பணிவுடன் இறங்கி விடுங்கள்” என்ற தூதின் சத்தம் என் காதுகளில் அனுதினமும் தொனிக்கிறது. 9T.185,186.CCh 235.3

    தேவன் எல்லாப் பாவங்களையும் சமமாக மதிக்கிறதில்லை. அவரிடம் குற்றத்தை மதிப்பதில் பல தரங்கள் உண்டு, மனிதனிடமும் இது இவ்வாறு கருதப்படுகிறது. மனிதனுடைய கண்களில் இந்தக் குற்றமோ அந்தக்குற்றமோ அலட்சிய மாகத் தோன்றின போதிலும் தேவனுடைய பார்வையில் எந்தப் பாவமும் சிறிதாக எண்ணப்படுவதில்லை. சிறிதான பாவம் என மனிதன் கருதக்கூடிய அதையே தேவன் பெரும் பாதகமாக கணிக்கிறார், குடிகாரனை புறக்கணித்து பரலோகம் அவனைப் பறம்பே தள்ளிவிடும் என்று சொல்லுகிறோம். ஆனால் அகந்தை, சுய நலம், இச்சைகளை கண்டிக்காமல் விட்டுவிடுகிறோம். சில பாவங்கள் தேவனுக்கு விசேஷ அளவில் அருவருப்பானது. அவர் “பெருமையுள்ளவனுக்கு எதிர்த்து நிற்கிறார்” பவுலார், இச்சை விக்கிரக ஆராதனைக்குச் சரி என்கிறார். தேவ வசனத்தில் விக்கிரக வணக்கத்தைக் குறித்து கண்டித்து எழுதியவைகளைச் சாதாரணமாக அறிந்திருப்பவர்கள் இச்சை எவ்வளவு கொடிய பாவம் என்பதை உடனே தெரிந்துகொள்வார்கள். 5T.337.CCh 236.1