Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    நடைமுறை வாழ்க்கையில் மார்க்கம்

    சுறுசுறுப்பும் ஊக்கமில்லாத சேவை எதுவும் நமது விசுவாசத்தைப் பொய்யெனக் காட்டுகிறது. பாவங்களில் மரித்தவர்களுக்கு நடைமுறை வாழ்க்கையில் காட்டும் கிறிஸ்து மார்க்கமே நல்ல எண்ணத்தை ஊட்டும். ஜெபித்து, தாழ்மையுடன் விசுவாசித்து தங்கள் கிரியைகள் மூலம் இரட்சிக்கும் சத்தியத்தைத் தங்கள் ஜீவியத்தில் காண்பிக்க விரும்புகிற கிறிஸ்தவர்கள் ஆண்டவருக்காக அனேக ஆத்துமாக்களைச் சேர்ப்பார்கள்.CCh 118.1

    நமது சபைகள் விசுவாசத்தில் தளர்ந்து பலவீனமாயிருக்க யாதொரு காரணமுமில்லை. நம்பிக்கையுடைய சிறைகளே, அரணுக்குள் திரும்புங்கள் சகரி. 9:!2. கிறிஸ்துவுக்குள் நமக்குப் பலமுண்டு. பிதாவுக்கு முன்பாக அவர் நமக்காக பரிந்துபேசுகிறவர். தமது ஜனத்துக்கு தமது சித்தத்தை வெளிப்படுத்த தமது தூதர்களை தம் ராஜ்யத்தின் எப்பாகத்துக்கும் அனுப்புகிறார். அவர் தமது சபைகளின் நடுவில் உலாவுகின்றார். தம் பின்னடியார்களைப் பரிசுத்தப்படுத்தி, உயர்த்தி, மேன்மைப்படுத்த விரும்புகின்றார். அவரை உண்மையாக விசுவாசிப்பவர்களின் செல்வாக்கு உலகத்திற்குச் சாரமாயிருக்கும். அவர் தமது வலக்கரத்தில் நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருக்கிறார்; அவைகள் மூலம் தமது ஒளி உலகத்திற்குப் பிரகாசிக்க வேண்டுமென்பதே அவர் திட்டம். இப்படியாக மேலான சபைக்கு அவர்களை ஆயத்தப்படுத்த அவர் விரும்புகிறார். நமக்கு ஒரு மாபெரும் வேலை கொடுத்திருக்கிறார். திட்டமாகவும் தீர்மானத்துடனும் அதைச் செய்வோமாக. சத்தியம் என்ன செய்திருக்கிற தென்பதை நம் ஜீவியத்தில் காண்பிப்போமாக.CCh 118.2

    நம் முன்னோடிகளின் தற்கதியாகமும் தன்னை யொறுத்தலும் சோர்வடையாத ஊக்கமும், ஊக்கமான ஜெபமும் வேலையை இப்பொழுது நாம் பார்க்கிற அளாவில் உயர்த்தியிருக்கிறது. ஆரம்பத்தில் இருந்த அளவு சிக்கலான சூழ்நிலைகளைக் கடந்து, தேவனுடைய வேலையில் மிகுதியான செல்வம் பெருகவிட்டதாலும், முந்திய தலைவர்கள் அனுபவித்த கஷ்டமான, தற்தியாகமும், விழிப்பும் தற்போது அவசியமில்லையென இப்பொழுது ஊழியத்துக்கு வருகிறவர்கள் எண்ணி, திறமையற்று திருப்தியடைகிற ஆபத்து நமக்கு வந்திருக்கிறது.CCh 119.1

    ஆரம்பத்திலிருந்த விழிப்பும் தற்தியாகமும் இன்றும் காணப்படுமானால் இப்பொழுது செய்யப்படுவதைப் பார்க்கிலும் நூறு மடங்கு அதிகமாகச் செய்யப்படுவதை நாம் காணலாம். 6T. 417 - 419.CCh 119.2

    தமது ஊழியம் மகோன்னதமானது. ஓய்வுநாள் ஆசரிக்கிற அட்வெந்திஸ்தராக நாம்க் தேவனுடைய எல்லாக் கற்பனைகளையும் கைக்கொள்கிறவர்களாகவும், அதிசீக்கிரம் நம் மீட்பர் வரப்போகிறாரென்றும் எதிர்நோக்குகிறோம். தேவனுக்கு உண்மையுள்ள சொற்பப்பேர் கைகளில் மிகவும் பக்திவினயமான இந்த எச்சர்ப்புத் தூது ஒப்புவிக்கப் பட்டிருக்கின்றது. நமது பேச்சாலும் கிரியையாலும் நம் மேல் ஒரு பெரும் பொறுப்பு சுமத்தப் பட்டிருக்கிறதென்று நாம் காட்டவேண்டும். நமது அனுதின ஜீவியம் பிதாவை மகிமைப் படுத்துவதாக மற்றவர்கள் காணும்படி நமது வெளிச்சம் தெளிவாய் பிரகாசிக்க வேண்டும். நாம் பரலோகத்தோடு இணைக்கப்பட்டு, கிறிஸ்துவுக்கு உடன் பங்காளியாகவுமிருப்பதால், அவர் மிகுந்த மகிமையோடும் வல்லமையோடும் வெளிப்படும்போது நாம் அவருக்கு ஒப்பாயிருப்போம். 4T. 16.CCh 119.3