Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    இரு படைகள்

    இரு படைகள் பயங்கரமாகப் போர் புரிவதை நான் தரிசனத்திலே கண்டேன். ஒரு சேனை உலக அடையாள முள்ள கொடிகளால் நடத்தப்பட்டது. வேறெரு சேனை இரத்தக் கறைப்படிந்த இம்மானுவேல் அரசனின் கொடிகளால் நடத்தப்பட்டது. கர்த்தருடைய சைன்னியத்திலிருந்து அனேகர் கூட்டம் கூட்டமாகச் சத்துருவோடு சேர்ந்து கொண்டபொழுதும் சத்துருவின் பக்கமிருந்து அனேகர் கோத்திரம் கோத்திரமாக கற்பனைகளைக் கைக்கொள்ளும் தெய்வ ஜனத்துடனே சேர்ந்து கொண்டபொழுதும் அவர்கள் முன்னர் பிடித்திருந்த கொடிகள் புழுதியிலே விழுந்து விட்டன. நடு வானத்திலே பறந்த தூதனொருவன் இம்மானுவேலின் கொடியைப் பலருடைய கரங்களில் கொடுத்தபொழுது, “வரிசையில் வாருங்கள். தேவனுடைய கற்பனைகளுக்கும் கிறிஸ்துவைப் பற்றிய சாட்சிக்கும் உண்மையாக இருக்கிறவர்கள் இப்பொழுது தங்கள் இடத்தைப் பெற்றுக்கொள்வார்களாக. நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்து போய் அசுத்தமானதைத் தொடாதிருங்கள். அப்பொழுது நான் உங்களை ஏற்றுக்கொண்டு உங்களுக்குப் பிதாவாயிருப்பேன். நீங்கள் எனக்கு குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்கள். பலவானுக்கு விரோதமாகக் கர்த்தருக்குத் துணையாக வரவிருப்பமுடையவர் அனைவரும் வருவார்களாக” என்று சத்தமிட்டு கூப்பிடுகிற வேறொரு பலமுடைய தளகர்த்தனின் குரலைக் கேட்டேன்.CCh 719.1

    இப்பொழுது சபையானது போராடுகின்றது. அனேகமாக விக்கிரகாராதனைக்கு முழுவதுமாக ஒப்புக்கொடுக்கப்பட்டு நடுராத்திரி இந்தகாரத்தில் மூழ்கிக் கிடக்கும் ஒர் உலகத்தோடு நாம் இப்பொழுது நேரிடையாக எதிர்த்துப் போராடுகின்றோம். என்ற போதிலும் நாம் வெற்றி பெற்று போரும் முடிந்து போகும் நாள் நெருங்கி வருகின்றது. பரலோகத்திலே செய்யப்படுகிறது போலவே பூலோகத்திலே மனுமக்களால் தெய்வ சித்தம் நிறைவேற்றப்பட வேண்டும். அப்பொழுது பரம பிரமாணம் மட்டுமே இவ்வுலகில் வழங்கிவரும். வேறு பிரமாணம் இராது. கிறிஸ்துவின் நீதியாகிய துதி ஸ்தோத்திர வஸ்திரங்களாகிய அங்கிகளைத் தரித்து அனைவரும் பாக்கியம் மிகுந்த ஓரே குடும்பத்தின் அங்கத்தினர்களாக இருப்பர். மட்டற்ற வனப்பு பொருந்தியதாக இயற்கை கடவுளை இடைவிடாது போற்றும். உலகில் பரம வெளிச்சம் நிறைந்திருக்கும். மகிழ்ச்சியுடனே வருடங்கள் கடந்து போகும். சந்திர வெளிச்சம் சூரிய வெளிச்சத்தைப் போலவும் சூரிய வெளிச்சம் இப்பொழுதிருப்பதை விட ஏழு மடங்கு அதிக வெளிச்சமாகவுமிருக்கும். அந்தக் காட்சியைக் கண்ணுறுகின்ற விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாகப்பாடி தேவ புத்திரர் எல்லாரும் கெம்பீரிப்பார்கள். அப்பொழுது கிறிஸ்துவானவரும் தேவனும் ஒரு குரலாக “இனி அங்கே பாவமுமில்லை மரணமுமில்லை” என்று கூறுவார்கள்.CCh 720.1

    எனக்களிக்கப்பட்ட காட்சி இதுவே. எனினும் சபையானது தோற்றம் அளிக்கிறவர்களும் காணப்படாதவர்களுமான சத்துருக்களுடனே போர் புரிந்தே ஆக வேண்டும். சாத்தானின் தூதர்கள் மனித வடிவத்தில் போர்க்களத்திலே காட்சி அளிக்கின்றனர். மனிதர் சேனைகளின் கர்த்தருக்கு விரோதமாகக் கட்டுப்பாடு செய்திருக்கின்றனர். கிறிஸ்து வானவர் கிருபாசனத்திற்கு முன்பாக பரிந்து பேசிக்கொண்டு நிற்கின்ற தமதிடத்தை விட்டு நீதியைச் சரிக்கட்டுதல் என்றழைக்கப்படுகிற வஸ்திரத்தை அணிந்துகொள்ளும் வரைக்கும் இக் கட்டுப்பாடுகள் நிலை பெறும். தேவனுடைய நியாயப் பிரமாணத்திற்கு விரோதமான கட்சிகளை ஓவ்வொரு நகரத்திலும் நிறுவும் அலுவலிலே சாத்தானுடைய காரியஸ்தர் இப்பொழுது ஈடுபட்டிருக்கின்றனர். பரிசுத்தவான்கள் என்று பெயர் பெற்றவர்களும் தேர்ந்த அவிசுவாசிகளும் இக்கட்சியின் அலுவல்களில் பங்கு பெறுகின்றார்கள். தெய்வ மக்கள் பலட்சியமுடையவராகவிருப்பதற்கு இது தக்கவேளை அன்று. நம்முடைய காவலை நாம் காத்து நிற்பதிலே ஒரு நிமிடமேனும் அஜாக்கிரதை காண்பிக்கக்கூடாது. 8T 41, 42.CCh 721.1