Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    கிறிஸ்துவோடும் ஒருவரோடொருவரும் இணைந்திருப்பதே நம் பாதுகாப்பு

    கிறிஸ்தவர்களுக்குள் பிரிவினைகள் இருப்பதைக் கண்டு, உலகம் மகிழ்ச்சியடைகிறது; நாஸ்திகம், அதிக பூரிப்படை கிறது. தமது ஜனத்திற்குள் மாறுதல் ஏற்படக் கடவுள் விரும்புகிறார். கிறிஸ்துவோடும் ஒருவரோடொருவரும் இணைந்திருப்பதே இக்கடைசி நாட்களில் நமக்குப் பாதுகாப்பாகும். இதோ, கிறிஸ்துவின் கொடியின் கீழ் நிற்கும் இந்த ஜனங்கள் எப்படி ஒருவரையொருவர் வெறுக்கிறார்கள். என் படையோடு அல்லாமல், அவர்கள் தங்களுக்குள்ளே சண்டையிடுமளவும் நாம் பயப்பட அவசியமில்லை எனச் சாத்தான் நம் சபையாரைப் பற்றி சொல்ல இடங்கொடுக்கலாகாது.CCh 163.2

    பரிசுத்த ஆவி இறங்கிய பின் சீஷர்கள் உயிர்த்தெழுந்த இரட்சகரைப் பற்றி கூறியறிவிக்கப் போனார்கள். அவர்களின் ஒரே ஆசை ஆத்துமாக்களின் இரட்சிப்பு. பரிசுத்தவான்களின் அந்நியோன்னியமாகிய இனிமையில் அவர்கள் களிகூர்ந்தார்கள். அவர்கள் உருக்கமும், ஆழ்ந்த சிந்தையும், நற்கதியாகமுமுடையவர்களாய், சத்தியத்தினிமித்தம் எத்தியாகமும் செய்ய சித்தமாயிருந்தார்கள். அவர்கள் தங்கள் தினசரி வாழ்க்கையில் கிறிஸ்து தங்களுக்குக் கட்டளையிட்டபடி பரஸ்பர அன்பு காட்டி வந்தார்கள். தன்னலமற்ற வார்த்தைகளினாலும், செயல்களினாலும் இதே அன்பை பிற இருதயங்களிலும் உண்டாக்க முயன்றார்கள்.CCh 164.1

    பரிசுத்த ஆவி இறங்கிய பின் அபோஸ்தலர்களுடைய இருதயங்களை நிரப்பிய அதே அன்பை விசுவாசிகள் பேண வேண்டும். நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்ற புதிய கட்டளையை நிறைவேற்ற மிக ஆயத்தமாயிருந்தார்கள். அவர்கள் இயேசுவோடு வெகுவாய் நெருங்கி ஜீவித்தபடியால், அவர் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியக் கூடியவர்களாயிருந்தார்கள். தமது நீதியினால் அவர்களை நீதிமான்களாக்கும் கிறிஸ்துவின் வல்லமையை அவர்கள் மகிமைப்படுத்த வேண்டியிருந்தது.CCh 164.2

    ஆனால் ஆதி கிறிஸ்தவர்கள் ஒருவரிலொருவர் குற்றம் பார்க்க ஆரம்பித்தார்கள். தவறுகளைக் குறித்து சிந்தித்து, அனுதாபமற்று, குற்றஞ் கண்டுபிடித்ததினால், அவர்கள் இரட்சகரையும், அவர் பாவிகளுக்காக வெளிப்படுத்திய அன்பையும் காணக் கூடாமற் போயினர். வெளிச் சடங்காச்சாரங்களையும், விசுவாசக் கோட்பாடுகளையும் அதிகக் கண்டிப்பாகக் கவனித்த கடினமாய்க் குற்றஞ் சாட்டி வந்தனர். பிறரைக் குற்றப்படுத்துவதில் அவர்கள் வெகு வைராக்கியமாக இருந்தபடியால், தங்கள் தவறுகளை மறந்துவிட்டனர். கிறிஸ்து கற்பித்த சகோதர அன்பை மறந்துவிட்டனர். தாங்கள் இழக்கப்பட்டுப்போனதைக் குறித்து அவர்கள் உணராதிருந்தது எல்லாவற்றிலும் துக்ககரமான விஷயம். தங்கள் ஜீவியங்களிலிருந்து சந்தோஷமும் மகிழ்ச்சியும் எடுபட்டதையும், தங்கள் இருதயங்கள் தேவன்பு சேரக்கூடாமல் அடைப்பட்டுப் போனதால் அவர்கள் விரைவில் நடக்க நேரும் என்பதையும் உணரவில்லை.CCh 164.3

    அப்போஸ்தலனாகிய யோவான் சபையிலிருந்து சகோதர அன்பு மறைவதை உணர்ந்து, அதைக் குறித்து எழுதினார். அவர் மரணமடையும்வரை ஒருவரையொருவர் சிநேகிக்கும் படி விசுவாசிகளை ஊக்கிக்கொண்டிருந்தார். பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக் கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது .... நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால், தேவன் நம் மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது . . . பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம். (1 யோவா. 4:7-11) என யோவான் இக்கருத்தை வலியுறுத்தி சபைகளுக்கு எழுதினார்.CCh 165.1

    தேவனுடைய சபையில் சகோதர சிநேகமே அதிகம் குறைவுபடுகிறது, கிறிஸ்துவை நேசிப்பதாக சொல்லிக்கொள்ளும் அனேகர் கிறிஸ்துவ ஐக்கியத்தில் தங்களோட்ய் இணைக்கப்பட்டிருப்பவர்களை நேசியாமல் அசட்டைபண்ணுகிறார்கள்.CCh 165.2

    நாம் ஒரே விசுவாசத்தில், ஒரே குடும்ப அங்கத்தினராக, ஒரே பரம பிதாவின் மக்களாக அழியாமைக்க்ரிய ஆனந்தபாக்கிய நம்பிக்கையுடையவர்க்ளாக இருக்கிறோம். நெருக்கமாகவும், உருக்கமாகவும் நாம் ஒருவரோடொருவர் கட்டப்பட்டிருக்க வேண்டும். நமது விசுவாசம் நம் இருதயத்தில் பரிசுத்தமாக்கும் சக்தியுடனிருக்கிறதாவென உலகத்தார் நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நமது ஜீவியத்திலும் செய்கைகளிலும் உள்ள தவறுகளை உடனுக்குடனே கண்டுபிடிக்க அவர்கள் விழிப்பாயிருக்கிறார்கள். நம் விசுவாசத்தைக் குறித்துக் குற்றஞ்சாட்ட நாம் அவர்களுக்கு இடங்கொடுக்கலாகாது. 8T. 240-242.CCh 166.1