Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    வேறுபாடுகள் தோன்றுதல்

    கணவனும் மனைவியும் தங்கள் பற்பல கடமைகளைக் குறித்து நேர்மையும் நியாயமுமான ஒழுங்கு செய்து கொள்ளவகை தேடினாலும், தங்கள் இருதயத்தை கடவுளுக்கு ஒப்புக் கொடுக்கத் தவறிப் போவார்களாயின், குடும்பத் தொல்லைகளைத் தகுதியாக ஒழுங்கு படுத்தி முடிப்பது அரிய செயல் ஆகும். கணவனும் மனைவியும் தங்கள் குடும்ப வாழ்க்கையின் நலன்களைத் தனித்தனியே பகிர்ந்துகொண்டு, அப்பால் ஒருவர் மேல் ஒருவர் அன்பும் உறுதியான பற்றும் வைத்துக் கொள்ளக்கூடுமோ? அவர்கள் தங்கள் குடும்ப விருத்திக்குரிய காரியங்கள் அனைத்திலும் ஒற்றுமைப்பட்ட கருத்துடையவர்களாய் இருக்க வேண்டும். மனைவி கிறிஸ்தவளாயிருந்தால் தன் கணவனைத் தனக்கு துணைவனாக வைத்துக் கொள்ளும் கருத்துடையவளாய் இருப்பாள். கணவன் தன் வீட்டிற்குத் தலைவனாகவே இருக்கிறான்.CCh 386.1

    நீ ஒரு காரியத்தைச் செய்ய முற்படும்போது காரியத்தை நன்கு சீர் தூக்கி, உன் சொந்த கருத்துக்களை நீ கொண்டு செலுத்த முற்படுவதின் பயன் எப்படி இருக்கும் என்பதை நீ ஆராய்ந்து பார். நீ கொண்டு செலுத்த விரும்பும் கருத்துக்களை உன் மனைவி ஏற்றுக்கொள்ளவில்லை என்று அறிந்திருந்து, உன் வேண்டுகோளிலும் உரையாடலிலும் அவற்றைக் கலந்து, உன் சுயேச்சையின்படியே நடந்து கொள்ளப் பார்க்கலாம். இந்த ஆவி தவறு. இருவரும் கருத்து வேறுபாடு கொள்ளுகின்ற விஷயங்களைக் குல மகன் செய்வது போல் மனைவி மனம் புண்படக்கூடாதென்று மதித்து அன்புடன் ஒதுக்கி வையாமல், அவள் மனதிற்கும் பிடித்தமில்லாத காரியங்களையே எப்பொழுதும் சொல்லிக்கொண்டிருந்து, உன்னைச் சூழ்ந்திருக்கின்றவர்கள் எவரையும் கவனியாமல், உன் சொந்த கருத்துக்களையே வற்புறுத்திப் பிடிவாதம் காண்பிக்கலாகாது. எந்தக் காரியத்திலும் பிறர் உன் கருத்திற்கு மாறுபட்டுப் பேச உரிமை இல்லை என்றே நீ மனத்தில் எண்ணிக்கொண்டிருக்கலாம். இவைகள் கிறிஸ்தவ விருட்சத்தில் உண்டாகும் கனிகள் அல்ல.CCh 386.2

    என் சகோதரனே, என் சகோதரியே, நீங்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ளுகிறதற்கு உங்கள் இருதயத்தின் கதவுகளைத் திறந்து வையுங்கள். அவரை உங்கள் இருதய ஆலயத்திற்குள்ளே வரவழையுங்கள். எல்லாருடைய மண வாழ்க்கையிலும் புகுந்துகொள்ளுகின்ற இடையூறுகளை மேற்கொள்ளுகிறதற்கு நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள். நீங்கள் உங்கள் எதிராளியாகிய பிசாசை மேற்கொள்ளுகிறதற்குக் கடுமையாகப் போராட வேண்டும். இந்தப் போரில் கடவுள் உங்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்று எதிர் பார்ப்பீர்களானால், நீங்கள் ஒருவருக்கொருவர் விரோதமாக யாதொரு தவறான வார்த்தையும் பேசாதபடி உங்கள் உதடுகளுக்கு முத்திரை போட்டு, அவனைத் தோற்கடிக்கும் தீர்மானத்தில் நீங்கள் இருவரும் ஒற்றுமையாய் இருக்க வேண்டும். மேலும் நீங்கள் உங்கள் முழங்காலில் நின்று, ஆண்டவரே, என் ஆத்துமாவின் எதிராளியை அதட்டித் துரத்துவீராக. என்று உரத்த குரலால் அவரை நோக்கிக் கூப்பிட வேண்டும்.CCh 387.1

    கடவுள் சித்தத்தை நிறைவேற்றினால், கணவனும், மனைவியும் ஒருவரையொருவர் நன்கு மதித்து, அன்பும் நம்பிக்கையும் வரைப்பண்ணுவார்கள். குடும்பத்தின் ஐக்கியத்தையும், சமாதானத்தையும் குலைக்கின்ற எந்தக் காரியத்தையும் மனவுருதியுடன் ஒதுக்கித் தள்ளி, தயவையும் அன்பையும் பாதுகாக்க வேண்டும். எவர் தயவும், பொறுமையும், அன்பும் நிறைந்த சிந்தை காண்பிக்கின்றாரோ, அவர் தம்மிடம் பிறர் அந்த சிந்தை காண்பிக்கிறதைக் கண்டு கொள்வார். எங்கே தேவ ஆவி ஆளுகை செய்கின்றதோ, அங்கே மண வாழ்க்கை யுறவிற்குப் பொருத்தமில்லாத எவ்வகைப் பேச்சும் உண்டாகாது. மகிமையின் நம்பிக்கை ஆகிய கிறிஸ்து உள்ளபடியே உள்ளத்தில் உருவாகுவாரானால், இல்லத்தில் ஒற்றுமையும் அன்பும் உண்டாகிவிடும். கிறிஸ்து தங்கியிருக்கின்ற உள்ளத்தையுடைய மனைவி, கிறிஸ்து தங்கியிருக்கின்ற உள்ளத்தையுடைய கணவனுடனே இணக்கமாய் நடப்பான். அவர்கள் தம்மை நேசிக்கிறவர்களுக்காகக் கிறிஸ்து ஆயத்தம் பண்ணப் போயிருக்கிற அந்த வாச ஸ்தலத்தை அடைகிறதற்கு ஒற்றுமையாய் முயற்சி செய்வார்கள்.CCh 387.2

    திருமணவுறவு கடவுளது தூய கட்டளையினால் காப்பாற்றப்பெற்ற பரிசுத்த நியமங்களில் ஒன்று என்று மதிக்கின்றவர்கள் பகுத்தறிவின் அதிகாரத்திற்கு அடங்கி நடப்பார்கள்.CCh 388.1

    திருமண வாழ்க்கையில் புருஷனும் மனைவியும் சில வேளை அடங்காத மாறுபாடுள்ள குழந்தைகள் போல் நடந்து கொள்ளுகின்றார்கள். கணவன் தன் வழியே போக விரும்புகின்றான். மனைவி தன் வழியே போக விரும்புகின்றான். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கிறதில்லை. அத் தன்மையுள்ள காரியத்தின் நிலைமை மகா பெரிய நிர்ப்பாக்கியத்தையே கொண்டு வரும். கணவன் மனைவி இருவரும் ஒருவர் வழிக்கு, அல்லது கருமத்திற்கு, அடுத்தவர் வீட்டுக்கொடுக்கும் மனமுடையவர்களாய் இருக்க வேண்டும். இருவரும் தங்கள் தங்கள் செய்கையிலேயே பிடிவாதமாய் இருந்தால், இன்பத்தை எதிர்பார்க்க வழி இல்லை. AH 118-121.CCh 388.2

    ஒருவருக்கொருவர் நீடிய பொறுமையும் அன்பும் உடையவர்களாய் இராவிட்டால், உலக வல்லமை ஏதும் உன்னையும் உன் கணவனையும் கிறிஸ்தவ ஐக்கிய பந்தத்தில் கட்டுப்படுத்த இயலாது. உங்கள் திருமணவுறவின் ஐக்கியம், தேவ வசனம் சொல்லுகிறபடி, நீங்கள் ஒருவருக்கொருவர் எல்லாவற்றிலும் எல்லாமுமாய் இருக்கும் வண்ணம், நெருக்கமும், உருக்கமும், தூய்மையும், உயர்வும் உங்கள் வாழ்க்கையில் ஆவிக்குரிய வல்லமையின் நறு மணமும் கமழ்வதாய் இருக்க வேண்டும். ஆண்டவர் அடைய வேண்டுமென்ற விரும்பு கின்ற நிலைமையை நீங்கள் அடையும் பொழுது, நீங்கள் பூலோகத்தில் பரலோகத்தையும், உங்கள் வாழ்க்கையில் கடவுளையும் கண்டடைவீர்கள்.CCh 388.3

    என் அருமைச் சகோதரனே, சகோதரியே, கடவுள் அன்பாகவே இருக்கிறார் என்றும், அவருடைய கிருபையினால் உங்கள் திருமணவுடன்படிக்கையில் நீங்கள் செய்வதாக வாக்களித்தபடியே ஒருவருக்கொருவர் மகிழ்ச்சி உண்டாகும்படி நடந்துகொள்வதில் சித்தி பெறக்கூடும் என்றும், நினைத்துக் கொள்ளுங்கள். AH 112CCh 389.1

    கிறிஸ்துவின் கிருபையினால் நீங்கள் சுயத்தின் மேலும் தன்னலத்தின் மேலும், வெற்றி அடைதல் கூடும். அவரைப் போல் வாழ்க்கை நடத்தி, ஒவ்வொரு அடியெடுப்பிலும் தியாகம் பண்ணி, உதவி வேண்டுவோரிடத்தில் எப்பொழுதும் உறுதியான அனுதாபம் காண்பித்து, உங்கள் வாழ்க்கையை நடத்துவீர்களானால், வெற்றிமேல் வெற்றி அடைவீர்கள். ஒவ்வொரு நாளும் தன்னை வெல்வது எப்படி என்றும், உங்கள் குணத்திலுள்ள பலவீனக்கூறுபாடுகளை நீக்கி அதைப் பலப்படுத்துவது எப்படி என்றும், முன்னிலும் நன்றாகக் கற்றுக்கொள்வீர்கள். நீங்கள் உங்கள் சித்தத்தை இயேசு சுவாமியின் சித்தத்திற்கு ஒப்புக்கொடுக்கிறபடியினால் அவர் தாமே உங்களுக்கு ஒளியும், பலமும், மகிழ்ச்சியின் கிரீடமுமாயிருப்பார். 7T 49 CCh 389.2