Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    சபையிலுள்ள திரித்திரருக்கு நமது கடமை

    இருவகையான திரித்திரர் நம்மிடத்திலே எப்பொழுதும் இருந்து வருகிறார்கள். தங்களுடைய சுயாதீன போங்கின்விளைவால் தங்களைக் கெடுத்து தரித்திரரானவர்கள் ஒருவகுப்பினர். சத்தியத்தை ஏற்றுக் கொண்டதின் விளைவாகத் தரித்திரரானவர் மற்றொரு வகுப்பினர்.CCh 240.1

    நம்மிடத்தில் அன்பு கூருவரு போலவே நாம் பிறரிடத்தில் அன்பு கூருவதுடன், ஞானத்தோடுகூடிய நல்லாலோசனைத் துணையால் இவ்விரு வகுப்பினருக்கும் நாம் செய்யத்தகுந்த சரியான முறையைக் கையாட வேண்டும். CCh 240.2

    கர்த்தருக்கென்று தரித்திரரானவர்களுக்காக உதவி செய்யும் விஷயத்தில் கேட்க வேண்டியதேயில்லை. அவர்களுடைய நலத்திற்காக ஒவ்வொரு காரியத்திலும் உதவி அளிக்க வேண்டியதவசியம்.CCh 240.3

    சத்தியத்தினிமித்தம் தரித்திரரானவர்கள் கெட்டுப்போக விட்டு விடப்படவில்லை என்று தெய்வ மக்கள் பாவ உவகிற்கு அறிவிக்க வேண்டுமென தேவன் விரும்புகிறார். சத்தியத்தினிமித்தமாகத் தங்கள் வீடுகளினின்று விரட்டப்பட்டவர்களையும், துன்பமடைகிறவர்களையும் கவனித்து உதவி செய்வதற்கு விஷேித்த பிரயத்தனங்கள் செய்யப்பட வேண்டும். திறக்கப்பட்ட விசாலமான இருதயமுடைய அனேகர் தேவை. தங்களை வெறுத்து கர்த்தர் சிநேகிக்கிற தரித்திரரின் காரியங்களை கவனிக்கக்கூடியவர்கள் தேவை.கர்த்தருடைய பிள்ளைகள் நடுவிலே இருக்கின்ற இவர்கள் தங்கள் தரித்திரநிலையினின்று நீங்குவதற்கு வழி செய்யாமலே விட்டு வைக்கப்படக் கூடாது. ஏதாவதொரு வகையில் அவர்கள் பிழைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். சிலர் வேலை செய்வதற்கு கற்பிக்கப்பட வேண்டியதாகும். தங்களாலிய்னறவரை மிகவும் வருந்தியுழைத்து, தங்கள் குடும்பங்களைக்காப்பாற்ற முற்படுகிறவர்கள் சிலருக்கு விசேஷித்த ஒத்தாசை அவசியப்படும். இவர்கள் மீது சிரத்தை ஒத்தாசை அவசியப்படும். இவர்கள் மீது சிரத்தை கொண்டு அவர்களுக்கு வேலைத் தேடி கொடுக்க நாம் முயல வேண்டும். தேவனை நேசித்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகின்ற, தகுதியுடைய இத்தகைய எளிய குடும்பங்களுக்கு உதவுவதற்கு ஒரு தனி நிதி வைக்கப்பட்டிருக்க வேண்டும்.CCh 240.4

    சந்தர்ப்ப வசத்தால் கடவுளை நேசித்து கீழ்பபடிகிற ஒரு சிலர் ஏழைகளாகிறார்கள். சிலர் அஜாக்கிரதையாயிருக்கிறார்கள். எவ்வாறு செலவு நடத்துவதென்று அவர்கள் அறிவதில்லை. வேறு சிலர் வியாதியினாலும் எதிர்பாராத விதமாக கேடுகள் சம்பவிப்பதாலும் ஏழைகளானவர். எக்காரணத்தால் அவர்கள் உண்டென்று அறிந்து அவர்களுக்கு உதவுவது சுவிசேஷ ஊழியத்தின் பிரதானமாகதோர் அம்சம்.CCh 241.1

    எங்கெல்லாம் சபைகள் ஸ்தாபனமாகியிருக்கின்றனவோ அங்கெல்லாம் அங்கத்தினர்கள் உதவி ஊழியஞ்செய்ய வேண்டும். இத்துடன் நில்லாது எவருக்கும் அவர்கள் எம்மார்க்கத் தாராயிருந்தாலும் உதவி செய்ய வேண்டியதே. 6T.269-271.CCh 241.2