Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தேவனாகிய பிதா கிறிஸ்துவில் வெளிப்படுகின்றார்

    தமது குமாரனில் தெய்வம் தம்மை ஓர் ஆளாகவே வெளிப்படுத்துகின்றார். பிதாவுக்குரிய மகிமையின் பிரகாசமும் அவருடைய தன்மையின் சொரூபமுமாகிய கிறிஸ்து (எபி.1:3) மனித உருவிலே தோன்றினார். ஆள் தத்துவமுடைய இரட்சகராக அவர் உலகில் வந்தார். ஆள் தத்துவமுடைய இரட்சகராகவே அவர் பரமேறினார்; பரலோக நீதி ஸ்தலத்தில் ஆள் தத்துவமுடையவராகவே அவர் நமக்காக பரிந்து பேசுகின்றார். தேவ சிங்காசனத்திற்கு முன்பாக நமது பொருட்டு மனுஷ குமாரமுடைய சாயலுக்கொப்பானவர் ஊழியஞ் செய்கின்றார். வெளி. 1:13.CCh 258.3

    உலகின் ஒளியாகிய கிறிஸ்துவானவர் ஜொலிக்கும் தமது தேவ மகிமையின் பிரகாசத்தினால் மனிதர் அழிந்துவிடாதபடி அதைத் திரையிட்டு மூடி, அவர்கள் தங்கள் சிருஷ்டிகரோடு சேர்ந்து பழகும் வகையில் மானிடருக்குள்ளே மானி டன் ஆனார். தேவனை ஒருவனும் ஒருகாலும் கண்டதில்லை. கிறிஸ்துவின் மூலமாகவே அவர் வெளிப்படுத்தப்பட்டார்.CCh 258.4

    மனிதர் அறியும்படியாக தேவன் விரும்புகின்ற காரியங்களைக் கற்றுக்கொடுக்கவே கிறிஸ்துவானவர் வந்தார். மேலேயிருக்கும் வான மண்டலங்களிலும் தாழவிருக்கின்ற பூமியிலும், விசாலமான சமுத்திரத்தின் ஆழங்களிலும் நாம் தெய்வ கரத்தின் கிரியைகளைப் பார்க்கின்றேன். சிருஷ்டிக்கப்பட்ட யாவும் அவருடைய வல்லமையையும், ஞானத்தையும், அன்பையும் குறித்து சாட்சி பகருகின்றன. என்ற போதிலும், கிறிஸ்துவில்தான் தெய்வத்துவம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது; நட்சத்திரங்கள், அலைகடல், நீர்விழ்ச்சி இவைகளின் மூலமாய் நாம் அதை அறிந்துகொள்ள முடியாது.CCh 259.1

    தம்முடைய ஆள் தத்துவத்தையும் குண நலத்தையும் இயற்கையானது வெளிப்படுத்துகிறதைப் பார்க்கிலும் தெளிவாக வெளிப்படுத்துவது அவசியமென்று தேவன் கண்டார். மனிதருடைய கண்கள் தாங்குமளவிற்கு அதரிசனமானவரின் இயல்பையும் குணலட்சணங்களையும் வெளிப்படுத்துமாறு தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பினார். தேவன் தாம், இயற்கைப் பொருட்களாகிய மலரிலும், மரங்களிலும், பசும்புல்லிலும் தங்கி இருப்பதாகக் காட்ட விரும்பியிருந்தால், கிறிஸ்துவானவர் இப் பூமியில் வாசம் பண்ணின போது தமது சீஷர்களிடம் அதைக் குறித்து கூறதிருந்திருப்பரோ? கிறிஸ்துவின் போதனைகளில் ஒருகாலும் தெய்வத்தைக் குறித்து இவ்வாறு கூறப்படவில்லை. ஆள் தத்துவமுடைய ஒரு தெய்வம் இருப்பதாகவே கிறிஸ்துவும் அப்போஸ்தலரும் போதித்தார்கள்.CCh 259.2

    பாவமுள்ள மனிதர் அதமாகாமல் கடவுளைப்பற்றி எவ்வளவு தூரம் அறிந்துகொள்ளவியலுமோ அந்த அளவிற்கு அவரைக் கிறிஸ்து வெளிப்படுத்தினார். அவரே நமது தெய்வீக ஞானாசிரியராகி நமக்கு விளக்கம் அளிக்கின்றவர். கிறிஸ்துவானவர் மூலமாகவும் எழுதப்பட்ட அவருடைய வார்த்தைகள் மூலமாகவும் வெளியானவை மட்டுமல்லாது, வேறு வெளிப்படுத்தல்கள் நமக்கு அவசியமாயிருந்தால் தெய்வம் அவற்றை அளித்திருப்பாரே.CCh 259.3