Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அத்தியாயம்-64

    கிறிஸ்துவே நம்முடைய மகாபிரதான ஆசாரியர்

    பரலோக பரிசுத்த ஸ்தலத்திலே நடைபெறுகின்ற ஊழியத்தைப் பற்றிய சரியான அறிவு நம்முடைய விசுவாசத்தின் அஸ்திபாரமாக இருக்கின்றது. Evangelism 221.CCh 734.1

    மலையிலே மோசேக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே பூமிக்குரிய பரிசுத்த ஸ்தலம் கட்டப்பட்டது. “அந்தக் கூடாரம் இக்காலத்திற்கு உதவுகிற ஒப்பனையாயிருக்கிறது. அதற்கேற்றபடியே காணிக்கைகளும் பலிகளும் செலுத்தப்பட்டன.” அதில் இருந்த இரு பரிசுத்த ஸ்தலங்களும் பரலோகத்திலிருந்தவைகளுக்கு மாதிரிகளாயிருந்தன. நம்முடைய மகா பிரதான ஆசாரியராகிய கிறிஸ்துவும் “அந்தப்படி மெய்யான பரிசுத்த ஸ்தலத்துக்கு அடையாளமான கையினால் செய்யப்பட்டதாயிருக்கிற பரிசுத்த ஸ்தலத்தானே” பிரவேசித்திருக்கிறார். தரிசனத்திலே அப்போஸ்தனாகிய யோவான் பரலோகத்திலிருக்கிற ஆலயத்தின் காட்சியைக் கண்டான். அங்கே “சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருக்கிற ஏழு குத்து விளக்குகளையும்” கண்டான்.CCh 734.2

    பரலோக பரிசுத்த ஸ்தலத்தின் முதல் அறையைத் தீர்க்கதரிசி கண்டார். அங்கே அவர் பூமியிலுள்ள பரிசுத்த ஸ்தலத்திலுள்ள போலவே “எரிகின்ற ஏழு தீபங்களையும்” “பொற் பலி பீடத்தையும்” பொன் குத்து விளக்கையும் தூப பீடத்தையும் கண்டார். மறுபடியும் ‘தேவாலயம் திற வுண்டு’ திரைக்கப்புறமாகவிருந்து மகா பரிசுத்த ஸ்தலத்தையும் கண்டார். அப்பொழுது மோசேயினால் செய்யப்பட்ட தேவப்பிரமாணமடங்கிய பரிசுத்தமான “அவருடைய உடன்படிக்கை பெட்டியைக் கண்டார். தான் பரலோகத்திலிருக்கும் பரிசுத்த ஸ்தலத்தைக் கண்டதாக யோவான் கூறுகின்றார். நமது மத்தியஸ்தராக இயேசுவானவர் ஊழியஞ் செய்யும் பரிசுத்த ஸ்தலத்தின் மாதிரியின்படியே மோசே பரிசுத்த ஸ்தலத்தை உண்டு பண்ணினார்.CCh 734.3

    ஆயிரமாயிரமானவார் நின்று, கோடாகோடி பேர் அவரைச் சேவிக்கும் பரலோக பரிசுத்த ஸ்தலம் இராஜாதி இராஜாவின் வாசஸ்தலமாகும். அந்த ஆலயம் நித்திய சிங்காசனத்தின் மகிமையினால் நிறைந்திருக்கும். அங்கே சேராபீன்களும் பிரகாசம் மிகுந்த பாதுகாவலரும் தங்கள் முகத்தை மூடி வணங்குகின்றனர். பூமிக்குரிய எந்த வாசஸ்தலமும் அதின் விரிவும் மகிமையுடையதாக இராது. என்ற போதிலும் பரலோக பரிசுத்த ஸ்தலத்தைப் பற்றிய முக்கியமான சத்தியங்களையும் மனித இரட்சிப்புக்கென்று அங்கே நடைபெறுகின்ற பெரும் வேலையையும் குறித்து பூமிக்குரிய பரிசுத்த ஸ்தலமும் அதிலே நடைபெறுகின்ற ஆராதனைகளும் கற்பிக்க வேண்டும்.CCh 735.1

    நமது இரட்சகர் பரலோகத்திற்கெழுந்தருளிப் போன பின்பு, அவர் நமது பிரதான ஆசாரியராகத் தமது வேலையை ஆரம்பித்தார். பவுல் அப்போஸ்தலன் பின் வருமாறு கூறுகின்றார்: “அந்தப்படி மெய்யான பரிசுத்த ஸ்தலத்துக்கு அடையாளமான கையினால் செய்யப்பட்டதாயிருக்கிற பரிசுத்த ஸ்தலத்திலே கிறிஸ்துவானவர் பிரவேசியாமல், பரலோகத்திலே தானே இப்பொழுது நமக்காக தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட்சமாகும்படி பிரவேசித்திருக்கிறார்.” எபி. 9:24. கிறிஸ்துவானவருடைய ஊழியம் இரண்டாகப் பகுக்கப்பெற்று ஒவ்வொன்றும் குறிப்பிட்ட கால வரையறைக்குட்பட்டு, பரலோக பரிசுத்த ஸ்தலத்திலே ஒரிடம் பெற் றது போலவே, மாதிரியாகவிருந்த ஊழியமும் இரு பிரிவுகளையும், அன்றாட வருஷாந்திர ஆராதனைகளையும், ஒவ்வொரு பிரிவான ஊழியத்திற்கு தனி இடமும் பெற்றிருந்தன.CCh 735.2

    கிறிஸ்துவானவர் பரமேறி, தெய்வ சமுகத்திலே பிரவேசித்து, தம்முடைய இரத்தத்தினாலே மனஸ்தாபப்படுகிற விசுவாசிகளின் பொருட்டு வேண்டிக் கொள்ளுகிறது போலவே, தன்னுடைய அனறாட ஊழியத்தின் போது பலியின் இரத்தத்தைப் பாவியின் சார்பில் பரிசுத்த ஸ்தலத்திலே ஆசாரியன் தெளித்தான்.CCh 736.1

    கிறிஸ்துவின் இரத்தமானது மனஸ்தாபப்படும் பாவியை நியாயப்பிரமாணத்தின் சாபத்திலிருந்து விடுவித்தபோதிலும் அது பாவத்தைப் பரிகரிக்காது. முடிவான பாவ நிவாரணம் ஏற்படுகிற நாள் வரைக்கும் அது பரிசுத்த ஸ்தலத்திலே பதிவாகியிருக்கும். அவ்வாறே மாதிரியான ஊழியம் நடப்பிக்கப்பட்டபொழுது, குற்ற நிவாரண பலி மனஸ்தாபப்படுகிறவரிடமிருந்து பாவத்தை அகற்றியது. என்ற போதிலும் பாவ நிவாரண நாள் மட்டாக அது பரிசுத்த ஸ்தலத்திலே நிலைத்தது.CCh 736.2

    முடிவான பலன் அளிக்கப்படும் மகா நாளிலே “புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் கிரியைகளுக்குத் தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.” அப்புறமாக பாவ நிவாரணத்தை உண்டுபண்ணுகிற கிறிஸ்துவின் இரத்தத்தினாலே மெய் மனஸ்தாபமடைந்த அனைவரின் பாவங்களும் பரலோக புஸ்தகங்களிலிருந்து கிறுக்கப் பெறும். இவ்வாறு பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பாவங்களின் பதிவு குறிப்பேடுகள் அகற்றப் பெறும். மாதிரியின்படியே பாவ நிவாரணமாகிய இப்பெரும் வேலை அல்லது பாவங்களை கிறுக்கிப் போடுவது பூமிக்குரிய பரிசுத்த ஸ்தலத்தை சுத்திகரிக்கும் பாவ நிவாரண நாளின் ஆராதனையினால் குறிப்பிடப்பட்டது. பாவ நிவாரண பலியின் இரத் தத்தினால் தன்னிடத்தில் சேர்ந்த பாவங்களினால் தீட்டாகிய பரிசுத்த ஸ்தலத்திலிருந்து இவை அகன்றன. PP 356-358.CCh 736.3

    நாம் மிகவும் நன்றாக அறிந்துகொள்ள வேண்டிய அலுவலின் மீது நம்முடைய மனம் தங்காதபடிக்கு சாத்தான் எண்ணிறந்த சூழ்ச்சிகளை நடப்பிக்கின்றான். பெரும் வஞ்சகன் பாவத்தை நிவிர்த்தி செய்யும் கிருபாதார பலியையும் எல்லாம் வல்ல ஒரு மத்தியஸ்தரையும் நாம் அறிந்துகொள்ள உதவுகின்ற பெரும் சத்தியங்களை வெறுக்கின்றான். இயேசு வானவரையும் அவருடைய சத்தியத்தையும் விட்டு நம்முடைய மனதை திருப்பினாலன்றி, தன் காரியம் நடவாதென்று அவன் அறிவான். CCh 737.1

    அவர்களின் பொருட்டு இயேசுவானவர் காயமடைந்த தம்முடைய கரங்களையும் நொறுக்கப்பட்ட தம்முடைய உடலையும் காட்டிப்பரிந்து பேசுகின்றார். தம்மைப் பின்பற்றும் அனைவரையும் பார்த்து, “என் கிருபை உனக்குப்போதும்.” என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்; என் நுகம்மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது” என்று கூறுகின்றார். எனவே ஒருவரும் தங்களுடைய குறைவுகள் குணமடையாவென்று எண்ண வேண்டுவதில்லை. அவற்றை மேற்கொள்ளுவதற்கு விசுவாசத்தையும் கிருபையையும் தெய்வம் அருளுவார்.CCh 737.2

    இப்பொழுது நாம் பெரும் பாவ நிவாரண நாளிலே வாழுகின்றோம். மாதிரியின் ஆராதனை முறைமையின்படி, பிரதான ஆசாரியன் இஸ்ரவேலருக்காகப் பரிந்து பேசும் பொழுது ஜனத்தினின்று அறுப்புண்டு போகாதபடிக்குப் பாவத்தைக் குறித்த மெய் மனஸ்தாபத்துடனே தங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்துமாறு அனைவருக்கும் கட்டளைக் கொடுக்கப்பட்டது. அங்ஙனமே தங்களுடைய அனுக்கிரக காலத்தில் மீந்திருக்கும் சில நாட்களுக்கு ஜீவபுஸ்தகத்திலிருந்து பேர் கிறுக்கிப் போடப்படாமல் இருக்கும் படியாக அனைவரும் பாவத்தைப் பற்றிய மனஸ்தாபத்தினாலும் மெய்யான மனந்திரும்புதலினாலும் தங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்த வேண்டும். உண்மையுடனே அவர்கள் தங்கள் சொந்த இருதயங்களை ஆழ்ந்து பரிசோதிக்க வேண்டும். அனேக பேர்க் கிறிஸ்தவரிடம் காணப்படுகின்ற அற்பத்தனமும் யோசனைக் குறைவுமுடைய ஆவி அகற்றப்படவேண்டும். தங்களை ஆண்டுகொள்ள முயலும் தீய இயல்புகளை கீழ்ப்படுத்துவதற்கு விரும்புகின்ற அனைவரும் ஊக்கமுடனே போராட வேண்டும். ஆயத்தப்படும் வேலை தனித்தனி நபருடையது. நாம் கூட்டம் கூட்டமாக இரட்சிக்கப்படுவதில்லை. ஒருவரிடம் பரிசுத்தமும் பயபக்தியும் காணப்படுவது மற்றவரிடத்தில் அவை குறைவாகவிருப்பதை சரிப்படுத்திவிடாது. சகல ஜாதிகளும் தேவனுடைய நியாயா சனத்திற்கு முன்பாக நின்ற போதிலும், ஒவ்வொருவரின் காரியத்தையும் உலகில் வேறெருவர் இல்லாதது போலவே, தனித்தனியாக அவர் பரிசோதித்து யாவும் கவனிப்பார். அனைவரும் பரீட்சிக்கப்பட்டு, கறை திரை ஒன்றுமில்லாத பிழையற்றவர்களாக அவருடைய சந்நிதியில் காணப்பட வேண்டும். CCh 737.3

    பாவ நிவாரணத்துடனே சம்பந்தமுடைய காட்சிகள் பக்தி வினயமானவை. அவற்றுடனே தொடர்புடைய காரியங்கள் பெரியவை. பரலோக பரிசுத்த ஸ்தலத்தில் இப்பொழுதே நியாயத்தீர்ப்பு கூறப் பெறுகின்றது. அனேக வருடகாலமாக இந்த அலுவல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. சீக்கிரமாக-எவ்வளவு சீக்கிரமாகவென்று ஒருவரும் அறியார்கள்-உயிரோடிருக்கிறவர்களிடத்திலே ஆரம்பமாகும். பய பக்தி மிகுந்த தெய்வ சமுகத்திலே நம் முடைய வாழ்வு சீர்தூக்கிப் பார்த்து அறியப்படும். இந்த வேளையிலே ஒவ்வொரு ஆத்துமாவும் மற்றெல்லா காரியங்களையும் விடவும் “வேளையை நீங்கள் அறியாதபடியினால் விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்” என்று இரட்சகர் கூறிய புத்திமதியைக் கவனித்து நடந்துகொள்ள வேண்டும்.CCh 738.1

    நுட்ப நியாய விசாரணையின் அலுவல் முடிவடைகின்ற பொழுது ஜீவனுக்கென்றோ மரணத்திற்கென்றோ அனைவருடைய கதியும் தீர்மானிக்கப்பட்டிருக்கும். கர்த்தர் வானத்தின் மேகங்களிலே வருகிறதற்கு சிறிது காலத்திற்கு முன்பாக கிருபையின் காலம் முடிவடையும். வெளிப்படுத்தல் ஆகமத்திலே கிறிஸ்துவானவர் அதை எதிர் நோக்கியவராக, “அநியாயஞ் செய்கிறவன் இன்னும் அநியாயஞ் செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதி செய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். இதோ சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடே கூட வருகிறது” (வெளி. 22 : 11, 12.) என்று உரைக்கிறார்.CCh 739.1

    நீதிமான்களும் துன்மார்க்கரும் தங்களுடைய அநித்தியமான வாழ்வை நடத்திக் கொண்டு இருப்பர். பரலோக பரிசுத்த ஸ்தலத்திலே மாறாத தீர்மானம் அறிவிக்கப்பட்டதை அறியாமலே மனிதர் நடவும், கட்டவும், புசிக்கவும், குடிக்கவும் செய்வார்கள்.CCh 739.2

    அமைதியாக, நள்ளிரவிலே திருடன் வருவதைப் போன்று ஒவ்வொரு மனிதனின் கதியையும் தீர்மானிக்கும் வேளை வரும். அதுவே குற்றமுள்ள மனிதருக்கு அளிக்கப்பட்ட கிருபை வாபஸ் பெறப்படும் வேளை. GC 488-491.CCh 739.3