Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    அத்தியாயம்-36

    வீட்டு வரவு செலவுத் திட்டம்

    தம் ஜனம் கண்ணும் கருத்துமாயிருக்க வேண்டுமென கர்த்தர் விரும்புகிறார். எல்லாவற்றிலும் சிக்கனத்தைக் கையாடி, ஒன்றையும், விருதாவாக்கக் கூடாதென அவர் எதிர் நோக்குகிறார்.CCh 430.1

    மிச்சம் பிடிக்கவும், செலவழிக்கவும் தக்க வேளையை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். நம்மை வெறுத்து, சிலுவையை உயர்த்தினாலன்றி நாம் கிறிஸ்துவின் அடியார்களாயிருக்க முடியாது. செலுத்த வேண்டியவைகளை நேர்மையாக செலுத்தியும், சித்றிய துண்டு துணுக்குகளைப் பொறுத்தி சேர்த்தும், சிக்குண்டவைகளை சரிப்படுத்தியும், உங்களுக்குரியது எதுவென நீங்கள் சொல்லக்கூடிய அளவு அறிந்து நடவுங்கள். சுய நல நாட்டத்திற்கென நீங்கள் செலவிட்ட அற்ப சொற்பமானவற்றையும் நீங்கள் கணக்கிட வேண்டும். உங்கள் சுவைகளையும், திரிபு செய்யப்பட்ட சுகபோக போஜனப் பிரியத்தையும் திருப்தி செய்யும்படி என்ன செய்கிறீர்களென நீங்கள் கவனிக்க வேண்டும். பயனற்றப் பண்டங்களுக்குச் செலவிடப்படும் காசு உங்கள் வீட்டு வசதிக்கும் செளகரியத்துக்குமான பொருட்களை வாங்க உதவியாயிருக்கும். நீங்கள் உலோபிகளாயிராமல், உங்களுக்கும் உங்கள் சகோதரருக்கும் உண்மையாய் இருங்கள். உலோபத்தனம் தேவன் அருளிய திரட்சியைத் துர்பிரயோகம் செய்வதாகும். ஊதாரித்தனமும் துர்ப்பிரயோகமாகும். வெளிச் செல்வது மிகச் சிறிய கடுகளவே என நீங்கள் எண்ணலாம்; ஆனால் முடிவில் அது ஒரு பெருந் தொகையென கண்டுகொள்வீர்கள்.CCh 430.2

    விளையாட்டு சாமானகள் போன்று அற்பமாய்த் தோன்றும் பொருட்களில் பணத்தை விரையஞ் செய்ய சோதிக்கப் படும் போது, விழுந்து போன மனுக்குலத்துக்காக கிறிஸ்து சகித்த தன்னை யொறுத்தல், தற்தியாகம் ஆகியவைகளை நினைவு கூறுங்கள். தன்னை யொறுக்கவும் தன்னடக்கமாய் நடக்கவும் நம் குழந்தைகள் கற்பிக்கப்பட வேண்டும். தங்கள் சுவைகளையும், போஜன பிரியத்தையும், மன விருப்பங்களையும் கட்டுப் படுத்தாதபடியால் பல வேத ஊழியர்கள் பணக் கஷ்டமிருப்பது போல் உணருகிறார்கள். பலர் பணமுடையடைந்து, தவறாக பணத்தைக் கையாடுவதற்குக் காரணமென்னவென்றால் அவர்கள் தங்கள் மனைவி மக்களுடைய ஆராதூரித்தனமான விருப்பங்களை நிறைவேற்றி வைக்க வழி தேடுவதினாலேயாகும். தங்கள் சொல்லாலும் செயலாலும் தாயும் தந்தையும் தங்கள் பிள்ளைகளுக்குச் சிக்கனத்தைக் கற்பிக்க ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.CCh 430.3

    சாந்தமும் மனத் தாழ்மையுமாயிருக்கிற இரட்சகரைப் பின்பற்றும் தாழ்மையான பின்னடியார்கள் தங்களுக்கு இருப்பதை விட அதிகமாகப் பாவனை பண்ணுவதும், அதிக ஐசுவரியவான்கள் போல் பாசாங்கு பண்ணுவதும் சிறந்ததல்ல. நாம் பின் பற்ற தகாத முறையில் நம் அயலகத்தார் தங்கள் வீடுகளைக் கட்டி தட்டு முட்டுகளால் அலங்கரித் திருப்பார்களாகில் நாம் அதைக் குறித்து கலவரப்படக் கூடாது. தம் சொந்த சுகபோக ஆகாராதிகளைப் படைக்கவும், நம் விருந்தினர்களை மகிழ்விக்கவும் நம் சுய விருப்பங்களைத் திருப்தி பண்ணவும் நாம் செய்யும் ஏற்பாடுகளைக் குறித்து இயேசு எவ்விதம் காண்கிறார்! நம் கையின் கீழிருக்கும் நம் குழந்தைகள் இப்படிச் செய்ய நாம் அனுமதிப்பது அல்லது டம்பமாக நடக்க விருப்பப்படி நோக்கங்கொள்வது நமக்கு ஒரு கண்ணியாகும். AH. 379-384.CCh 431.1

    உபயோகப்படக்கூடிய எதையும் எறிந்துவிடக்கூடாது. இதற்கு ஞானம், முன் யோசனை, இடையறாக் கவனம் அவசியமாகும். சிறிய காரியங்களில் மிச்சம் பிடிக்கத் திறமையற்றிருப்பது அனேக குடும்பங்களில் வாழ்க்கையின் தேவை கள் பல குறைவு படுவதற்குக் காரணமென எனக்குக் காட்டப்பட்டது. C.G. 135.CCh 431.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents