Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தெய்வ சமுகத்தில் இருப்பது போல் நடந்துகொள்

    அவரது அளவிடப்படாத மகிமையும், அவரது பிர சன்னத்தைப் பற்றிய உணர்ச்சியும், மெய் பக்தியை அருளுகிறது. இவ்வித உணர்ச்சியினால், அதரிசனமானவரைப் பற்றிய உணர்வினால் ஒவ்வொரு இருதயமும் ஆழ்ந்த உணர்ச்சி கொண்டு ததும்ப வேண்டும். ஜெப ஸ்தலமும் நேரமும் பரிசுத்தமானது; ஏனெனில் கடவுளின் சமுகம் அங்கு இருக்கிறது. நமது போக்கிலும் நடையிலும் காணப்படும் பய பக்தியை உண்டாக்கும் இவ்வுணர்வு ஆழ்ந்து காணப்படும். “அவருடைய நாமம் பரிசுத்தமும் பயங்கரமுமானது” என்று சங்கீதக்காரர் கூறுகிறார். (சங்கீதம் 111:9.) G.W.176-178.CCh 216.3

    ஜெபத்துடன் ஆராதனை ஆரம்பமாகும்போது, ஒவ்வொரு முழங்காலும் பரிசுத்தரின் முன்பாக முடங்கி, இருதயங்களில் அமைதியுள்ள தியானம் நிரம்பி அவை பரலோகத்திற்கு நேராக எழும்ப வேண்டும். மெய் பக்தரின் ஜெபங்கள் கேட்கப்படுவதோடு, வேத போதனையும் பயனுள்ள தாகும். தேவனுடைய வீட்டில் ஆராதிப்போரிடம் காணப்படும் உயிரற்ற நிலை தெய்வ ஊழியம் பெரிதும் பயனற்றுப் போவதற்கு ஒரு பெரும் காரணமாகும். பல இருதயங்களில் இருந்து தெளிவான உச்சரிப்புடன் வெளிப்படும் பாட்டுகளின் இன்னிசை ஆத்துமாக்களை இரட்சிக்க கடவுள் கையாளும் கருவிகளில் ஒன்றாகும். தேவ சபைகளின் அதிபதியானவரின் பிரத்தியட்ச சமுகத்தில் இருப்பதுபோன்று சகல ஆராதனை முறைமைகளும் பயபக்தியுடனும், அச்சத்துடனும் நடை பெற வேண்டும்.CCh 217.1

    தேவ வசனத்தைக் கூறி அறிவிக்கும்போழுது அதைக் கேட்கிறவர்கள் அவ்வார்த்தைகள் தேவ சத்தம் என்றும், அவரால் அனுப்பப்பட்ட ஊழியக்காரன் மூலம் அருளப்படுகிறதென்றும் நினைவிற்கொள்ள வேண்டும். அதைக் கவனித்துக் கேளுங்கள், தூங்கிவிழாதேயுங்கள், ஏனெனில், உங்களுக்குத் தேவையான போதனை அந்நேரத்தில் கூறப்படலாம். அதைக் கவனித்தால் தவறான பாதைகளில் நிற்பதினின்று உங்கள் பாதங்கள் பாதுகாப்புப்பெறும். உங்கள் புலன்களைத் திமிர் அடையச் செய்வதில் சாத்தானும் அவனது வேலைக்காரரும் சுறுசுறுப்பாயிருக்கிறார்கள். இப்படிப்பட்ட வேளையில் எச்சரிப்புகள், புத்திமதிகள், கடிந்து கொள்ளுதல் உங்கள் செவிகளில் படாமற்போகும். கேட்கப்படுவதானாலும், அவை இருதயத்தில் கிரியை செய்து ஜிவிய சீர்திருத் தம் உண்டாக்காது. சில வேளைகளில், ஒரு சிறு குழந்தை கேட்போரின் கவனத்தை மாற்றிவிடுவதால், அருமையான வித்தாகிய வசனம் நல்ல நிலத்தில் விழாமல் பலனடையாமற் போகலாம். வாலிபரும், கன்னிகைகளும் ஆலயத்தைக் குறித்தும், ஆராதனையைக் குறித்தும் மிகச் சிறிய அளவில் தானும் பக்தியில்லாமையால் ஆராதனை நேரத்தில் அவர்கள் நெடுக செய்தி பரிமாறிக் கொண்டிருக்கின்றனர். தூதர்கள் இதைக் கவனித்து, குறித்தவைப்பதை இவர்கள் காணக்கூடுமானால், இவர்கள் வெட்கத்தால் நிறைந்து, தங்களைப் பற்றி அருவருப்படைவர். வசனத்தைக் கவனத்தோடு கேட்கறவர்களைத் தேவன எதிர்பார்கிறார். மனிதர் நித்திரை செய்தபொழுது சாத்தான் களைகளை விதைத்தான்.CCh 217.2

    ஆராதனை முடிவில் தேவாசீர்வாதம் கூறப்படும்பொழுது, கிறிஸ்துவின் சமாதானத்தை இழந்துபோவோமே எனறு அஞ்சி அமைதியுடன் இருக்க வேண்டும். ஆலயத்தினின்று வெளியேறும்போது ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டும், பேசிக்கொண்டும்போகாமல், அவர்கள் தேவ சமுகத்தில் இருப்பதாகவும், தேவ கண்கள் அவர்கள் பேரில் அமர்ந்திருப்பதாகவும் உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும். ஆலயத்தின் நடைபாதைகளில் நின்றுகொண்டு, ஒருவரை ஒருவர் சந்திப்பதிலும், வீண் பேச்சுகளிலும் ஈடுபட்டு பிறரை வழி மறிக்காதீர்கள். ஆலயத்த்ன் உட்பாகம் பரிசுத்த பயபக்திக் குரியதாக மதிக்கப்பட வேண்டும். பழைய நண்பர்களைச் சந்தித்து பேசியும், சாதாரணப் பேச்சுகளைப் பேசி உலக அலுவல்கள் புரியும் இடமாக ஆக்கக்கூடாது. இவை யாவும் ஆலயத்திற்குப் புறம்பேயே நிறுத்தப்படவேண்டும். தேவனும் அவரது தூதர்களும் கவனையீனமான உரத்த சிரிப்பினாலும், கால்களின் சலசலப்பினாலும் கனவீனம் அடைகிறார்கள்.CCh 218.1